Home> Tamil Nadu
Advertisement

பஸ் ஸ்டிரைக்: அமைச்சர்களுக்கு முதல்வர் முக்கிய அறிவுரை!

பஸ் ஸ்டிரைக்: அமைச்சர்களுக்கு முதல்வர் முக்கிய அறிவுரை!

பஸ் ஸ்டிரைக்கை சமாளிக்க அமைச்சர்கள் அனைவரும் தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு உடனடியாக செல்ல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவுறுத்து உள்ளார்.

13_வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத் தொகையை கணக்கிட்டு வழங்கிட வேண்டும், போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டத்துக்கு அரசே பொறுப்பேற்று அதனை ஈடுசெய்ய வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறை நிர்வாக பிரதிநிதிகளுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இன்று வேலைநிறுத்தம் தொடங்கும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று தமிழக்கத்தில் போக்குவரத்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த போராட்டதின் காரணமாக ஆட்டோக்கள், டாக்சிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 

இதனால் நிலைமையை சரிசெய்ய அமைச்சர் தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று சூழலை ஆய்வு செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read More