Home> Tamil Nadu
Advertisement

கண்ணீர்மல்க போராடிய மீனவ மூதாட்டி - அரசு பேருந்து நடத்துனர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்

மீன் நாற்றம் அடிப்பதாக கூறி அரசுப் பேருந்தில் இருந்து மூதாட்டியை இறக்கிவிட்ட நடத்துனர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கண்ணீர்மல்க போராடிய மீனவ மூதாட்டி - அரசு பேருந்து நடத்துனர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்

குளச்சல் அருகே வாணியக்குடி கடற்கரை கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், மீன் வியாபாரம் செய்து வருகிறார். தினமும் காலையில் மீன்களை எடுத்து சென்று குளச்சல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள மீன்களை மாலையில் குளச்சல் மார்க்கெட்டில் விற்பனை செய்வார். இரவு குளச்சலில் இருந்து மகளிருக்கான அரசு இலவச பேருந்தில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், நேற்று மூதாட்டி மீன்களை விற்பனை செய்துவிட்டு குளச்சல் பஸ் நிலையத்தில் இருந்து வாணியக்குடி செல்லும் அரசு பஸ்சில் ஏறியுள்ளார்.

:ALSO READ | ’பத்து அமாவாசைக்குள் அதிமுக அரியணை ஏறும்’ - பொள்ளாச்சி ஜெயராமன் ஆருடம்

அப்போது, மீன் நாற்றம் அடிப்பதாக கூறி மூதாட்டியை கண்டக்டர் இறக்கிவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி பஸ் நிலைய கட்டுப்பாட்டு அலுவலகம் முன் சென்று நியாயம் கேட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் குளச்சல் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி அங்கிருந்த பயணிகளிடம் தன் ஆதங்கத்தை கூறியபடி, கண்கலங்கி நின்றதை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், நடத்துனர் மணிகண்டன் மற்றும் பேருந்து ஓட்டுநர் மைக்கேல், சமய குறிப்பாளர் ஜெயக்குமார் ஆகிய 3 பேரை உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ | ’பூனை காணவில்லை’ அடையாளம் ‘உதட்டில் மச்சம்’... கண்டுபிடித்தால் ரூ.5000 சன்மானம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More