Home> Tamil Nadu
Advertisement

லஞ்சம் கொடுத்த வழக்கு: டி.டி.வி.தினகரன் டெல்லியில் கைது

லஞ்சம் கொடுத்த வழக்கு: டி.டி.வி.தினகரன் டெல்லியில் கைது

அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது தேர்தல் கமிஷனிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.

கடந்த 17-ம் தேதி இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள். சுகேஷ் சந்திரசேகர் கைதானபோது அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சமும், 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  

கடந்த 4 நாட்களாக தினகரனிடம் நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே எனக்கு தெரியாது என்று டி.டி.வி. தினகரன் முதலில் கூறினார். ஆனால் சுகேசிடம் பேசியதற்கான ஆதாரங்களைக் காட்டிய பிறகு ஆமாம் இவரைத் தெரியும். இவரை ஐகோர்ட் நீதிபதி என்று நினைத்தேன் என தினகரன் ஒத்துக் கொண்டார். 

தினகரனுக்கும், இடைத்தரகர் சுகேசுக்கும் எப்போது, எப்படி தொடர்பு ஏற்பட்டது என்ற விசாரணையை போலீசார் தொடங்கினார்கள். நேற்று இந்த விசாரணை நேற்று இறுதிக்கட்டத்தை அடைந்தது.

அதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் நேற்று இரவு 12 மணிக்கு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  டி.டி.வி.தினகரனுடன், நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

தினகரனை கைது செய்தது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் திட்டமிட்ட சதி என்று அதிமுக-வை சேர்ந்த அனைச்சர்கள் கூறியுள்ளனர்.

Read More