Home> Tamil Nadu
Advertisement

breaking news! தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

+2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மத்திய அரசின் வழியையே தமிழக முதலமைச்சரும் பின்பற்றியுள்ளார்

breaking news! தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று தமிழ்க அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னதாக சி.பி.எஸ்.இ வாரியத்தின் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது. அதையடுத்து, பல மாநிலங்களிலும் வாரியங்களும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தன.

தமிழக அரசும் பன்னிரெண்டாம் வகுப்பு  ரத்து செய்வதா அல்லது தள்ளி வைப்பதா? என கடந்த சில நாட்களாவே ஆலோசனை நடத்தி வந்தது.தற்போது தேர்வை ரத்து செய்யும் முடிவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு குறித்த ஆழமான ஆலோசனைகளுக்குப் பிறகு மாணவர் நலன் கருதி தேர்வுகளை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பரிந்துரைகளை வழங்கிட குழு அமைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்விக்கான சேர்க்கை நடைபெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Also Read | +2 தேர்வு எப்பொழுது? முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதி முடிவை அறிவிப்பார்

நாடு மூவதும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையின் காரணமாக தமிழக அரசு போர்க்கால அடிபப்டையில் மக்களை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்து வெற்றியும் பெற்றுள்ளது.

அதேபோல, தமிழக பள்ளி கல்வி வாரியத்தில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான தேர்வுகளை ஒத்திப் போடுவதா இல்லை ரத்து செய்வதா என்று கடந்த 3 தினங்களாக தமிழக அரசு கலந்தாலோசனை நடத்தி வந்தது. 

பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று தீவிரமாக இருப்பதை முன்னிட்டும், கொரோனா மூன்றாவது அலை வரலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருப்பதை கவனத்தில் கொண்டு 12ஆம் வகுப்புத் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. 

ALSO READ |  தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? முதல்வர் முக்கிய ஆலோசனை

12ஆம் வகுப்புத் தேர்வில் மாநிஅல் கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பொதுத்தேர்வுகள் மட்டுமே உயர்கல்வி வாய்ப்புகளுக்கான தகுதியாக கருதப்பட வேண்டும் என்பது திமுகவின் கொள்கை. அந்தக் கொள்கையில் மாநில அரசு உறுதியாக இருந்தாலும், மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான +2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதில் பாமக கட்சியின் நிறுவகர் மருத்துவர் ராமதாசு டிவிட்டரில் தனது பாராட்டுக்களை பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி இதைத் தான் வலியுறுத்தியது. நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More