Home> Tamil Nadu
Advertisement

குடித்துவிட்டு பெண் போலீஸை தாக்கிய பா.ஜ.க நிர்வாகியின் மகன்-தொடர் சர்ச்சையில் சசிகலா

Sasikala Pushpa Son: பா.ஜ.க கட்சியின் மாநில துணைத்தலைவரும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவின் மகன் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

குடித்துவிட்டு பெண் போலீஸை தாக்கிய பா.ஜ.க நிர்வாகியின் மகன்-தொடர் சர்ச்சையில் சசிகலா

அதிமுக கட்சியின் முக்கிய தொண்டர்களுள் ஒருவராக இருந்தவர், சசிகலா புஷ்பா. அது மட்டுமன்றி, இவர் ராஜ்யசபாவின் எம்.பியாகவும் தூத்துக்குடியின் மேயராகவும் பதவி வகித்துள்ளார். 2017ஆம் ஆண்டு வெளியில் சொல்லப்படாத ஒரு சில காரணங்களுக்காக இவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கடந்த 2020ஆம் அண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து மீண்டும் அரசியலிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்தார். பிறகு, அக்கட்சியின் மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். இப்போது பாஜகவின் பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறார். இவரது மகன், தற்போது குடித்து விட்டு பெண் போலீஸ் அதிகாரியை தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குடித்துவிட்டு வண்டி ஓட்டினாரா? 

சசிகலா புஷ்பாவிற்கு பிரதிப் ராஜ் என்ற மகன் உள்ளார். இவர், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள விருகம்பாக்கம் சாலையில் வாகனம் ஓட்டிக்கொண்டு சென்றுகொண்டுள்ளார். அப்போது, அங்கே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் வண்டியில் வந்த பிரதிப் குமாரை மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது சோதனைக்கு உடன்பட பிரதிப் குமார் மறுத்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, “நான் யாரென்று தெரியுமா” எனக்கேட்டு சோதனை செய்த பெண் போலீசின் கையை முறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், குடித்து விட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க | என்னை முதல்வர் ஆக்கினால் 150 வயது வரை உயிருடன் இருக்கலாம் - சரத்குமார்!

அண்ணாமலை உதவி? 

சசிகலா புஷ்பாவின் மகன் இவ்வாறு போலீஸில மாட்டியுள்ளதை அடுத்து, அவருக்கு உதவி செய்வதற்காக பா ஜ க மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் மகன் விரைவில் வெளியானால் இந்த தகவல் கன்ஃபார்ம் செய்யப்பட்டுவிடும் என அரசியல் விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

தொடர் சர்ச்சையில் சசிகலா புஷ்பா..

அதிமுகவின் முன்ளாள் நிர்வாகியான சசிகலா புஷ்பா மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர், திமுக கட்சியை சேர்ந்த திருச்சி சிவாவுடன் பொதுவெளியில் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவை அடுத்து சசிகலா தலைமை ஏற்க இருந்த போது அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தாகவும் இதனால் அவரை கட்சியை விட்டு தூக்குவதற்காக வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்க கட்சியினர் முயற்சி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இவர், மீது பாலியல் தாெழில் குற்றச்சாட்டு, இரண்டாவது கணவர் கொடுத்த புகார் என எக்கச்சக்க புகார்கள் உள்ளன. மேலும், சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன் மற்றும் அவரது மகன் ஆகியோர் அவர்களது வீட்டில் வேலை செய்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

வைரல் வீடியோ..

சசிகலா புஷ்பா, சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் போது பாஜக மாநில பொது செயலாளர் பொன்.பாலகணபதி சில சில்மிஷ செயல்களில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியாவில் சசிகலா புஷ்பாவுக்கு அருகில் மிக நெருக்கமாக நின்றுகொண்டிருந்த அவர் சசிகலாவின் கையை கிள்ளுவதும், தொடுவதும் அதை சசிகலா புஷ்பா தடுக்க முயல்வதும் போல காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதையடுத்து, சசிகலா புஷ்பாவின் மகன் பெண் காவலரை தாக்கியதாக குற்றம் பதிவு செய்யபடப்டு கைதாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை ரவுண்ட் கட்டிய சவுக்கு சங்கர்! சிக்கப்போகும் அமைச்சர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More