Home> Tamil Nadu
Advertisement

தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்... வந்து விழுந்த கேள்வி - அமைச்சர் அன்பில் மகேஷின் பதில் என்ன?

Teachers Protest: நிதி நெருக்கடி இல்லாமல் எதை முதலில் அமல்படுத்த முடியுமோ அதை செய்வோம் என ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார். 

தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்... வந்து விழுந்த கேள்வி - அமைச்சர் அன்பில் மகேஷின் பதில் என்ன?

Teachers Protest: சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் உள்ள அமிட் கடல்சார் பல்கலைகழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு "கை கொடுப்போம் கிராமப்புற நூலகங்களுக்கு" என்ற தலைப்பில் சென்னைவாழ் மக்களிடம் வீடு, வீடாகச் சென்று அவர்கள் படித்து முடித்த புத்தகங்களை பல்கலைகழக மாணவ, மாணவிகள் ஒரே நாளில் ஒரு இலட்சம் புத்தகங்களை சேகரிக்கும் திட்டத்தின் தொடக்க விழா இன்று (அக். 2) நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். அப்போது அவரிடம் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கேட்டபோது, "ஏற்கனவே மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறோம். நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பெர்சனல் செகரட்டரி மூலமாக பேசியிருக்கிறோம். முதலமைச்சர் இரண்டு முறை தொலைபேசியில் பேசி இருக்கிறார். அதற்கான காரணங்களை சொல்லி இருக்கிறோம். நம் தேர்தல் அறிக்கையில் கூறியதாக அவர்கள் கேட்கிறார்கள். நிதி சார்ந்து, நிதி சாராதது என்று பிரித்து அவர்களுக்கு எது முக்கியத்துவம் இப்போது குறிப்பாக ஒரு மூன்று விதமான அமைப்புகள் இந்த போராட்டத்தில், 'போராட்டம்' என்று சொல்வதைக் காட்டிலும் எங்களுடைய கவனத்தை இருக்கின்ற ஒரு நிகழ்வாக நாம் பார்க்கிறோம்.

மேலும் படிக்க | மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள்தான்

இப்போது அதற்கான ஆலோசனை நடத்தி 13 வகையான கோரிக்கை அதைப் பிடித்து இருக்கிறோம். ஏற்கனவே பல சங்கங்களை நாங்கள் நேரில் சந்தித்து கோரிக்கை பெற்று நிதித்துறை அமைச்சரிடமும், அதன் செயலாளரிடமும் ஆலோசனையை நானே நடத்தி உள்ளேன். 

முதலமைச்சர் அலுவலகத்திற்கும் தற்போது நடைபெறுகிற போராட்டத்தை கொண்டு செல்கிறோம். இதில் நிதி நெருக்கடி இல்லாமல் எதை முதலில் அமல்படுத்த முடியுமோ அதை செய்வோம் என்கின்ற உறுதிமொழி இருக்கிறது. அந்த வகையில் தான் என்று எங்களுடைய பிரின்சிபால் செக்யூரிட்டி அவர்களுடன் பேச இருக்கிறோம். பேசி நாளை முதல் பள்ளி தொடங்க உள்ள நிலையில் ஆசிரிய பெருமக்கள் தங்கள் உடல் நலத்தை வருத்திக் கொள்ளாமல் அதற்கு என்ன தீர்வு காண முடியுமா அதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் எங்கள் பணிகள் இருக்கும். 

ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று முறை இந்த போராட்டம் நடந்துள்ளது. அதில் தங்களின் குறைகளை வைத்துள்ளார்கள். நான் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். இதற்கான தீர்வு முதலமைச்சர் என்ன தீர்வு கொடுக்கிறார்களோ அதுதான். இது நல்ல விதத்தில் ஒரு முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன்" என்றார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அல்லது திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தோற்றால் அந்த மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என்று முதலமைச்சர் கூறியது குறித்து கேட்டபோது,"என்னுடைய தலைவர் எப்படியோ, அதேபோல் மற்ற தொண்டர்கள் எல்லாம் பணியாற்ற வேண்டும் என்பதை தான் அந்த விதத்தில் அவர் சொல்லி இருக்கிறார். மாவட்ட செயலாளர்களை தூக்கி விடுவேன் என்று சொல்லவில்லை. இது நமக்கான பணி என்றைக்கும் கட்சி தான் முக்கியம். தனி மனிதனை காட்டிலும் இயக்கம் தான் முக்கியம் என்று சொல்லி இருக்கிறார். அந்த விதத்தில் கடந்த மக்களவை தேர்தலில் 39 ஜெயித்தோம், இந்த முறை புதுச்சேரி சேர்த்து 40 தொகுதியும் ஜெயிக்க வேண்டும் என்று கூறினார்" என அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்தார். 

இறுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தொடர்ந்து தள்ளுபடி ஆகிக்கொண்டே இருக்கிறது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பதிலளிக்காமலே சிரித்தபடியே சென்றுவிட்டார். அமைச்சர் பங்கேற்ற அந்த நிகழ்வில் பல்கலைகழக பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | திமுக அரசை விமர்சித்து விஜய் ரசிகர் ஒட்டி உள்ள போஸ்டரால் பரபரப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More