Home> Tamil Nadu
Advertisement

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு எடுத்தால் நடவடிக்கை!

கடைகளில் 14 வயதுக்கு குறைவானவர்களை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு எடுத்தால் நடவடிக்கை!

காரைக்குடி: வர்த்தக நிறுவனங்களில் 14 வயதுக்கு குறைவானவர்கள் வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன் ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.

காரைக்குடியில் உள்ள பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், வெல்டிங் கடைகள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள், தனியார் கடைகள், ஜவுளிக்கடைகள் என அனைத்து இடங்களிலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன் ஜார்ஜ் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டனர். 

fallbacks

ஆய்வுகள் முடிந்த பின் சைமன் ஜார்ஜ் பேசுகையில், தற்போது பண்டிகை நாட்கள் நெருங்கி கொண்டிருக்கின்றன.  ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் என வருவதால் குழந்தைகள் ஜவுளி கடைகள் உட்பட மற்ற வர்த்தக நிறுவனங்களில் வேலைக்கு ஈடுபடுத்தாமல் தடுக்க ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.  இந்த ஆய்வில் 14 வயதுக்கு குறைவானவர்கள் ஏழு பேர் கண்டறியப்பட்டனர்.  அந்தக் கடை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

மேலும் 14 வயதுக்கு குறைவான குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளோம் என்று கூறினார்.  மேலும் இது கொரோனா காலம் என்பதால் அனைவரையும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அணிவுறுத்தி உள்ளோம்.  அனைத்து வேலையாட்களையும் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதை கடையின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

ALSO READ COVID-19 Update: இன்று 1,359 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 20 பேர் உயிரிழப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More