Home> Tamil Nadu
Advertisement

குற்றாலம் முக்கிய அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு....

குற்றாலம் முக்கிய அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

குற்றாலம் முக்கிய அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு....

குற்றாலம் முக்கிய அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் குற்றாலம் முதன்மை அருவியில் நல்லிரவு முதல் பலத்த மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. 

இதனால், விடுமுறை தினமான இன்று ஆர்பரித்துக் கொட்டும் அருவியில் ஆவலுடன் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகளும், கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி முதன்மை அருவியில் புனித நீராட குவிந்த ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

அதேவேளையில், பழையகுற்றாலம், புலி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீராக கொட்டுவதால், அங்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.

நெல்லை மாவட்டத்தின் ஆன்மிக சுற்றுலா தலமான திருக்குற்றால பாடல் பெற்ற சிவத் தலமாகத் திகழ்கிறது. சிவப்பெருமாள் நர்தனம் ஆடிய பஞ்ச சபைகளில் சித்திர உருவில் காட்சி தரும் சித்திர சபை குற்றாலத்தில் அமைந்திருக்கிறது.

திருக்குற்றாலம் பிரதான அருவியில் நீராடி விட்டு திருக்குற்றாலநாதரை தரிசித்து வந்தார் தெய்வன் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நிலையில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை நிலவும் காலங்களில் குற்றால அருவிகளில் நீராட பக்தர்கள் கூட்டம் கலை கட்டும்.

இதேப்போல் அக்டோபர் மாதம் துவங்கி அடுத்த நான்கு மாதங்களுக்கு வடகிழக்கு பருவமழை காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த காலத்தில் ஐய்யப்ப சீசனும் வருவதால் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றாலநாதரை தரிசிக்க செங்கோட்டை வழியாக அச்சங்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா, பம்பை வழியாக சபரிமலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் பொது அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வரும் நிலையில் தற்போது குற்றாலம் முக்கிய அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வித்திள்ளனர்.

Read More