Home> Tamil Nadu
Advertisement

மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசத்தின் இடங்களில் தங்கம், ரொக்கம் பறிமுதல்

மாசு கட்டுப்பாட்டு வாரிய முறைகேடு! தலைவர் வெங்கடாசத்தின் இடங்களில் மேற்கொண்ட சோதனையில் கோடிக்கணக்கான மதிப்புடைய தங்கம், ரொக்கம் பறிமுதல் 

மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசத்தின் இடங்களில் தங்கம், ரொக்கம் பறிமுதல்

மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலத்திற்கு சொந்தமான 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் மேற்கொண்ட சோதனையில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 6.5 கிலோ தங்கம் மற்றும் 12.5 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இவற்றைத் தவிர சந்தன மரத்தாலான 10 கிலோ பொருட்களும் கண்டறியப்பட்டன. இதையடுத்து வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

இந்திய வனத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வெங்கடாசலம், 2019ம் ஆண்டு முதல் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்னதாக வாரியத்தின் உறுப்பினர் செயலராகவும் பணிபுரிந்துள்ளார்.

Also Read | சினிமா பாணியில் 10 ரூபாய் நோட்டின் மூலம் லஞ்சம் கொடுத்தது எப்படி தெரியுமா?

இன்னும் சில நாட்களில் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் வெங்கடாசலம் லஞ்சம் பெற்றதாகக் கூறிய லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர் மீது வழக்கு பதிந்தனர்.

முந்தைய அதிமுக ஆட்சியில் நிறுவனங்களுக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தடையில்லா சான்றிதழை வழங்குவதற்காக வெங்கடாசலம் லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்ப்டையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைகளை மேற்கொண்டனர். இதில் பெருமளவிலான தங்கம் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

Read Also | தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு இல்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More