Home> Tamil Nadu
Advertisement

அடுத்தடுத்து நடக்கும் மறுவாழ்வு மைய மரணங்கள்... இயற்கை மரணமா? கொலையா?


சென்னை ராயப்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

அடுத்தடுத்து நடக்கும் மறுவாழ்வு மைய மரணங்கள்... இயற்கை மரணமா? கொலையா?

சென்னை ராயப்பேட்டை அம்பேத்கர் நகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ராஜி. 45 வயதான இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். ஆட்டோ தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையானதால் ராஜிக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சென்னை கேர் சென்டர் என்ற தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அவரை சேர்த்துள்ளனர். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ராஜி மீண்டும் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல மது அருந்தியதால்  ராஜிக்கும் அவரது மனைவிக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் அடித்துக் கொலை?.. நடந்தது என்ன?

இதனையடுத்து போதை மறுவாழ்வு மையத்தில் மீண்டும் ராஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் போதை மறுவாழ்வு மையத்தில் அடிபட்ட நிலையில் கீழே விழுந்து கிடந்ததாக கூறப்படும் ராஜியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தத் தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த மனைவி கலா ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது ரத்த காயங்களோடு ராஜி கிடந்தார்.

fallbacks

ராஜியின் உடலை பார்த்த கலா இது கொலையாக இருக்கக்கூடும் என அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக அண்ணாசாலை போலீசார் போதை மறுவாழ்வு மைய மேலாளர் மோகன், ஊழியர்கள் ஜெகன் மற்றும் பார்த்தசாரதி ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க | தேர்வு நேரத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மின்சார வாரியம்

இதற்கிடையே ராஜியின் சகோதரி முனியம்மா தனது சகோதரர் போதை மறுவாழ்வு மையத்தில் அடித்து கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். நிலைமை இப்படி இருக்க இந்த மரணம் தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இன்று கடலூரைச் சேர்ந்த பார்திபன் என்பவரும் மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்தார். அவரது இறப்பிலும் சந்தேகம் இருப்பதாக அவர் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து மறுவாழ்வு மையத்தில் நிகழ்ந்த மரணங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் லாக்கப் டெத்தை கடந்து செல்வதுபோல் இதையும் கடந்து செல்லக்கூடாது என சமூக செயற்பாட்டாளர்கள் கூறிவருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More