Home> Tamil Nadu
Advertisement

டாஸ்மாக்குகளை மூட, கள் இறக்குதலை அனுமதியுங்கள்! - அண்ணாமலை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென்றால், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.  

டாஸ்மாக்குகளை மூட, கள் இறக்குதலை அனுமதியுங்கள்! - அண்ணாமலை

விருதுநகர் செய்தியாளர் சங்க அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், விருதுநகரில் 22 வயதுப் பெண் மீது நடைபெற்ற பாலியல் குற்றத்திற்காக பாஜக கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், இக்கூட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளிகள் திமுகவை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தினம்தினம் அதிகரித்து வருவதாகவும், இவை அனைத்தையும் தடுக்க ஆளும் கட்சி கட்டுப்பாட்டிலிருந்து காவல்துறை வெளியே வர வேண்டும் எனவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், குற்றவாளிகள் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் என்பதால் சிபிசிஐடி முறையாக நியாயமாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த 8 பேர் தவிர மேலும் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களை வெளியிட்ட முதல்வர்

மேலும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக அரசு வேலை வழங்க முன்வரவேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு வைப்பு நிதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்பொழுது உள்ள அரசு மதுவை நம்பி உள்ள அரசு எனவும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென்றால், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பெட்ரோல் டீசல் விலை குறித்து பேசிய அவர், மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். 

மேலும் படிக்க | பொள்ளாச்சி மாதிரி விருதுநகரை விடமாட்டோம்... தண்டனையை இந்தியாவே திரும்பி பார்க்கும் - மு.க.ஸ்டாலின்

பட்டாசு தொழில் குறித்து பேசும்போது, பட்டாசு தொழிலை பாதுகாக்க பாரதிய ஜனதா கட்சி முழு ஆதரவு நிலைப்பாடு எடுத்திருப்பதாகவும், அடுத்த ஐந்து வருடங்களில் சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 50 ஆயிரம் கோடி ரூபாய் பட்டாசுகள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More