Home> Tamil Nadu
Advertisement

இன்னும் எத்தனை உயிர்களை இந்த நீட் காவு வாங்கப் போகிறது? -TTV!

பதவி நாற்காலிக்காக NEET தேர்வை ஆதரிக்கும் தமிழக அரசு இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்க காத்திருக்கின்றது? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்!

இன்னும் எத்தனை உயிர்களை இந்த நீட் காவு வாங்கப் போகிறது? -TTV!

பதவி நாற்காலிக்காக NEET தேர்வை ஆதரிக்கும் தமிழக அரசு இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்க காத்திருக்கின்றது? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்!

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 51%-க்கும் மேற்பட்ட - சுமார் 75,000 தமிழக மாணவ, மாணவியர் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.

நீட் தேர்வில் தோல்வியடைந்தமையால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், அதேப்போல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மாணவி வைஷியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்விற்கு தடை விதிக்கவேண்டும் என அரசியல் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவிக்கையில்., 

"தமிழக மாணவச்செல்வங்களின் மருத்துவ கனவில் மண்ணள்ளி போடும் நீட் தேர்வில் தோல்வியடைந்த அன்பு மாணவிகள் திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா ஆகியோர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வேதனையில் மனம் விம்முகிறது.

இன்னும் எத்தனை உயிர்களை இந்த நீட் காவு வாங்கப் போகிறது ? இன்னும் எத்தனை பேரின் கனவுகளைக் கருக்கிடப் போகிறது? நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் இரண்டாண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மசோதாவின் கதி என்ன ஆனது?

பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளைக் கொடுக்கப்போகிறார்கள்?" என குறிப்பிட்டுள்ளார்.

Read More