Home> Tamil Nadu
Advertisement

ஆர்கேநகரில் சசி: தொப்பி, ஓபிஎஸ்: இரட்டை மின் கம்பம்!

ஆர்கேநகரில் சசி: தொப்பி, ஓபிஎஸ்: இரட்டை மின் கம்பம்!

அதிமுக என்ற கட்சிப்பெயரையோ இரட்டை இலை சின்னத்தையோ பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டதை அடுத்து சசிகலா அணியினர் தங்களுடைய கட்சிக்கு அதிமுக அம்மா என்று பெயரிட்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்கேநகர் தொகுதி காலியானது. அதற்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணியினர் இரட்டை இலை சின்னத்தை கேட்டு மனு தாக்கல் செய்தன. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகிய அணிகளிடம் விசாரணை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம் ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது. சின்னம் முடக்கப்படுகிறது. இரு அணிகளும் அதிமுக என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக என்ற பெயர் இல்லாத வேறு ஒரு புதிய பெயரை இரு அணிகளும் தேர்ந்தெடுத்து அது குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஓபிஸ் அணியினர் தங்களுடைய கட்சிக்கு அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்று பெயரிட்டுள்ளனர். மேலும் கட்சியின் சின்னமாக இரட்டை மின் கம்பம் தேர்ந்தெடுத்தனர்.

அதேநேரத்தில் சசிகலா அணியினர் தங்களுடைய கட்சிக்கு அதிமுக அம்மா என்று பெயரிட்டுள்ளனர். மேலும் கட்சியின் சின்னமாக தொப்பி தேர்ந்தெடுத்தனர்.

Read More