Home> Tamil Nadu
Advertisement

தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கம்....இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும்!

‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது. 

தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கம்....இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும்!

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் (மே 4 ஆம் தேதி) இன்று முதல் தொடங்கிறது. இந்த அக்னி நட்சத்திரம் மே 28 ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்திரி வெயிலின் காலத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே ஒருசில நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது.

ஆனால் நடப்பாண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இதனால் மாநகரப்பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துகள் முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் பெரிதாக பொதுமக்களுக்கு தெரியவில்லை.

ALSO READ: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க புதிய பானம் மாநிலங்களுக்கு பரிந்துரை: ஆயுஷ் அமைச்சகம்

இந்நிலையில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம்(மே 4 ஆம் தேதி) இன்று முதல் தொடங்கி 28 ஆம் தேதி வரை நீடிக்கிறது. இதனால் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் பகல் பொழுதில் சற்று குறைந்து காணப்படுகிறது. இதற்கிடையில் மமக்கள் ஊரடங்கிற்கு இடையே அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே சென்றால் குடை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More