Home> Tamil Nadu
Advertisement

காஞ்சி பட்டு... பல நூறு வருடங்களுக்கு பின் மீண்டும் இயற்கை சாயத்தில் பட்டுப்புடவைகள்!

Kancheepuram Silk Sarees: சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலன் ஆகியவற்றை காக்கும் வகையில் பாரம்பரிய காஞ்சி பட்டில் முந்தைய கால இயற்கை சாயத்தை கொண்டு புதிய முயற்சியாக சேலைகள் உருவாக்கம்.

காஞ்சி பட்டு... பல நூறு வருடங்களுக்கு பின் மீண்டும் இயற்கை சாயத்தில் பட்டுப்புடவைகள்!

Kancheepuram Silk Sarees: உலகளவில் பட்டு நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பாரம்பரியமான காஞ்சி பட்டு சேலைக்கு அடிமை ஆகாத பெண்களே இல்லை என கூறலாம். காலங்கள் மாறினாலும் பாரம்பரியத்துடன் தற்போது நவீன டிசைன் மற்றும் வண்ணங்களில் தற்போதைய இளம் பெண்களுக்கான பட்டு சேலைகளை உருவாக்கு அதனை அணிந்து கொள்ள  பெண்கள் அதிக ஆர்வம் கொண்டு வருகின்றனர்.

இயற்கை முறையில் சாயம் 

இந்நிலையில் தற்போதைய பட்டு சேலையில் செயற்கை சாயத்தை கொண்டு வண்ணம் சேர்க்கும் பணியினால் சுற்றுச்சூழல் மாசடைந்து,குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் மற்றும் ரசாயனங்களால் உடல் தீங்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் முந்தைய காலங்களில் நடைமுறைப்படுத்திய பல்வேறு பொருட்களைக் கொண்டு இயற்கை முறையில் சாயம் இடுதலை மீண்டும் தனியார் பட்டு சேலை உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளனர்.

தனியார் பட்டுச்சேலை உற்பத்தி நிறுவனங்களின் முயற்சி

அவ்வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள பட்டுப்பூங்காவில் உள்ள தனியார் பட்டுச்சேலை உற்பத்தி நிறுவனங்கள் பல நூறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயற்கை சாயத்தினை பயன்படுத்தி  பட்டுப்புடவைகளை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். அதன்படி சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலன் ஆகியவற்றை காக்கும் வகையில் பாரம்பரிய காஞ்சி பட்டில் முந்தைய கால இயற்கை சாயத்தை கொண்டு புதிய முயற்சியாக பட்டுச்சேலைகளை உருவாக்கும் பணியில் நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க | இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது: ஜி கே வாசன்

fallbacks

இயற்கை சாயம் பூசப்பட்ட பட்டு புடவைகள்

செயற்கை சாயத்திற்கு பதிலாக, மாதுளம் பூ ,கடுக்காய்,சப்ரான், படிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு மீண்டும் இயற்கை சாயம் பூசப்பட்ட பட்டு புடவைகளை நெசவாளர்கள் உருவாக்கி வருகின்றனர். இந்த முயற்சி தங்களுக்கு மன நிறைவை அளித்தாலும், பொருளாதார ரீதியாக இது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதால் மீண்டும் இதனை குறைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தனியார் பட்டு சேலை உற்பத்தி நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க |  சித்ரா பௌர்ணமி: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More