Home> Tamil Nadu
Advertisement

என்ஐஏ சம்மன் ஏதும் அனுப்பவில்லை: நடிகை வரலட்சுமி சரத்குமார்

விழிஞ்சம் கடற்கரை ஹெராயின் மற்றும் ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், என்ஐஏ சம்மன் அனுப்பியதாக பரப்பப்படும் அனைத்து தகவல்களும் பொய்யானவை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.   

என்ஐஏ சம்மன் ஏதும் அனுப்பவில்லை: நடிகை வரலட்சுமி சரத்குமார்

தமிழ்நாட்டின் திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள், வெளிநாட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தலில் தொடர்புள்ளவர்கள்; இதன் மூலமான பணத்தை வைத்து இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கின்றனர் என்ற தகவல் என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது. 

ஆதிலிங்கம் கைது

இந்நிலையில் கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் சிக்கிய சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் ஈழத்தை சேர்ந்த குணா, புஷ்பராஜ், அஸ்மின் உள்ளிட்ட 13 பேர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே இலங்கை தமிழர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 14ஆவது நபராக ஆதிலிங்கமும் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க | ஹெராயின் பறிமுதல்: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு சம்மன்... அதிரடி காட்டும் என்ஐஏ

திரைத்துறையில் முதலீடா?

fallbacks

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பிரமுகரான குணசேகரன் என்பவருடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்ததும், போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் நடிகை வரலட்சுமியிடம் ஆதிலிங்கம் உதவியாளராக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

இதனால், ஆதிலிங்கத்தின் முதலீடு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமியை என்.ஐ.ஏ. விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் விடுத்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அப்படியான சம்மன் ஏதும் தனக்கு கொடுக்கப்படவில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் அறிக்கை மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆதிலிங்கம் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ.வினால் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று பரப்பப்படும் அனைத்து செய்திகளும் பொய்யானவை மற்றும் வெறும் வதந்திகள். அப்படி எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை.

திரு.ஆதிலிங்கம் 3 வருடங்களுக்கு முன்பு என்னுடன் ஃப்ரீலான்ஸ் மேலாளராக ஒரு குறுகிய காலம் மட்டுமே பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் நான் பல ஃப்ரீலான்ஸ் மேலாளர்களுடன் ஒரே நேரத்தில் பணிபுரிந்தேன். அவரது பதவிக் காலத்துக்குப் பிறகு இன்றுவரை எங்களுக்குள் எந்த தொடர்பும், தொடர்பும் இல்லை. உண்மைகளின் அடிப்படையில்  தகவல்களை வெளியிடுமாறு ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | மனைவி செய்த கொடூரம்..! படங்களை மிஞ்சும் ட்விஸ்டு..! ஆடிப்போன நாமக்கல் போலீஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More