Home> Tamil Nadu
Advertisement

'விக்ரம்' ஓவர்; கட்சிப் பக்கம் திரும்பினார் கமல்! - அடுத்த மாஸ்டர் பிளான் ஸ்டார்ட்!

அடுத்தடுத்து படங்கள், பிக்பாஸ் என பிஸியாக இருந்துவரும் நிலையில் தனது அரசியல் பணிகளையும் மீண்டும் தொடங்கியுள்ளார் கமல்ஹாசன்.  

'விக்ரம்' ஓவர்; கட்சிப் பக்கம் திரும்பினார் கமல்! - அடுத்த மாஸ்டர் பிளான் ஸ்டார்ட்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் 400 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. கமலின் கரியரில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் மாறியுள்ளது. 

இப்படத்தை அடுத்து மகேஷ் நாராயணன் இயக்கவுள்ள படம், லோகேஷின் கைதி-2, ஷங்கரின் இந்தியன்- 2 மற்றும் சபாஷ் நாயுடு உள்ளிட்ட படங்கள் கமலுக்கு வரிசை கட்டி நிற்கின்றன. இதற்கு நடுவே பிக்பாஸ் நிகழ்ச்சியும் கமலின் கைவசம் உள்ளது. இதனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓரிடம்கூட பெறாத கமல், அரசியலைவிட்டு ஒதுங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் கமலோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. அண்மையில் நடந்த விக்ரம் பட விழாவொன்றில் இதுபற்றிப் பேசிய கமல், அடுத்த தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடவுள்ளதாகக் கூறி தனது அரசியல் இருப்பை உறுதி செய்தார்.

fallbacks

மேலும் படிக்க | ‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய் ஓட்டும் பைக்கின் விலை இத்தனை லட்சமா!

 

இந்நிலையில் தற்போது அதன் அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளார் கமல். ஆம், தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக ம.நீ.ம கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்த உள்ளாராம் கமல். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கியுள்ள ஆலோசனை கூட்டமானது, அடுத்ததாக,நெல்லை மண்டலத்துக்குட்பட்ட தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, விழுப்புரம், சென்னை, கோவை பகுதிகலில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கட்சியை வலுப்படுத்துவது பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்க நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளாராம். வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகளில் கமல் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | விஜய்யின் ‘வாரிசு’ போஸ்டர்ஸ் 6.01 PM, 11.44 PMக்கு வெளியானது ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More