Home> Tamil Nadu
Advertisement

பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு புகுந்த ஆண் காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினர்.    

பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் நாள்தோறும் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர்  தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம். தற்போது மருதமலை வனப்பகுதியில் 16 யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் 14 யானைகள் ஐஓபி காலனி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்தது. 

இதனை அடுத்து வனத்துறையினர் அந்த யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்தது வளாகம் முழுவதும் சுற்றி வந்தது. யானை பல்கலைக்கழக வாயிலில் உள்ள காவலாளி அறையில்  வைக்கப்பட்டிருந்த மாவு, மற்றும் அரிசியை  எடுத்து சாப்பிட்டது. 

மேலும் படிக்க | போதைப்பொருளை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: பொன்முடி குற்றச்சாட்டு

இது குறித்து அங்கிருந்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் அந்த யானையை சத்தம் எழுப்பி மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். அடிக்கடி அப்பகுதியில் காட்டுயானைகள் அப்பகுதியில் முகாமிடுவது வாடிக்கையாகிவிட்டது. பொதுமக்கள் இருக்கும் பகுதிக்குள் காட்டுயானைகள் வருவது அப்பகுதி மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

மேலும் படிக்க | NCRB 2021: தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் அதிகரிப்பு; கடுமையான நடவடிக்கை தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More