Home> Tamil Nadu
Advertisement

கேம் விளையாட விடாததால் வீட்டில் இருந்து நகை, பணம் எடுத்துச் சென்ற 15 வயது சிறுவன்!

கேம் விளையாட விடாததால் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்ற 15 வயது சிறுவனை 24 மணி நேரத்திற்குள் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் மீட்டனர்  

கேம் விளையாட விடாததால் வீட்டில் இருந்து நகை, பணம் எடுத்துச் சென்ற 15 வயது சிறுவன்!

சென்னையில் ஃப்ரீ பையர் கேம் விளையாட பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துச் சென்ற 24 மணி நேரத்திற்குள் சிறுவனை போலீசார் பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மொட்டை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட் குமார் சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது 15 வயது இரண்டாவது மகன் வீட்டில் எந்நேரமும் ஃப்ரீ பையர் கேம் விளையாடி வந்ததாகவும் அதனால் வீட்டில் உள்ள அனைவரும் சிறுவனை கண்டித்ததாக கூறப்படுகிறது.   

ALSO READ சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு மருத்துவர்கள் இருவர் கைது

இதனால் ஆத்திரமடைந்த செல்வம் 17ஆம் தேதி இரவு எட்டரை மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.   வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது பீரோவில் இருந்த முப்பத்தி மூன்று லட்சம் பணம் 213 சவரன் தங்க நகைகளை எடுத்துச் சென்றதும் தெரிய வந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  புகாரின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட  போலீசார் தாம்பரம் பகுதியில் சிறுவன் இருப்பதாக தெரியவந்தது அடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் 24 மணி நேரத்திற்குள் சிறுவனை மீட்டு பணம் மற்றும் நகையை கைப்பற்றி பெற்றோரிடம் கொடுத்து சிறுவனை கண்டித்து வீட்டிற்கு அனுப்பினார்.

fallbacks

விசாரணையில் பிரீ பையர் கேம் விளையாட அனுமதி மறுத்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துச் சென்றதாகவும் நகையை தாம்பரத்தில் உள்ள ஒரு கடையில் அடகு வைத்து முயற்சித்து பணத்திற்காக காத்திருந்ததாகவும் 44 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து நேபால் செல்வதற்காக இன்று காலை விமானத்தில் டிக்கெட் புக் செய்து இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.   மேலும் கோவிட் சோதனை மேற்கொள்வதற்காக சிறுவனை காத்திருக்க வைத்ததாகவும் புதிய செல்போன் வாங்கி மீண்டும் தனது நண்பர்களை ஃப்ரீ பையர் கேம் விளையாட அழைத்த போது அதனை டிராக் செய்து போலீசார் சிறுவனை பிடித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.  வீட்டில் பெற்றோர்கள் ஃப்ரீ பையர் கேம் விளையாட கண்டித்ததால் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையை எடுத்து சென்று நேபால் வரை செல்ல முயன்ற சிறுவனின் செயல் வண்ணாரப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

fallbacks

ALSO READ போராடியவர்களுக்கும், புரிந்துகொண்ட அரசுக்கும் நன்றி-நடிகர் கார்த்தி..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More