Home> Tamil Nadu
Advertisement

#Sterlite ஆலையில் ரசாயனக்கழிவுகளை அகற்றும் பணி 99% நிறைவு!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது பொய்யான தகவல் என தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்! 

#Sterlite ஆலையில் ரசாயனக்கழிவுகளை அகற்றும் பணி 99% நிறைவு!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது பொய்யான தகவல் என தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்! 

ஸ்டெர்லைட் ஆலையை மூடகொரிய மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டது. மேலும் கடந்த மே 28 தமிழக முதல்வர் உத்தரவின்படி, ஸ்டெர்லைட்  ஆலை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

சமீபத்தில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலால் பொது மக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சரி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர். ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு ஏற்பட்ட கந்தக அமில குடோனில் சுமார் 1,000 லிட்டர் கந்தக அமிலம் இருப்பதாக கூறியிருந்தனர். 

ஆலையில் இருந்து ரசாயன கசிவை சரிசெய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனக்கழிவுகளை அகற்றும் பணி 99% நிறைவு பெற்றுள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்பது பொய்யான தகவல் என்றும் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழக அரசின் முடிவின்படி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய 100-வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது!

 

Read More