Home> Tamil Nadu
Advertisement

69_வது குடியரசு தினவிழா: தமிழக கவர்னர் தேசிய கொடியேற்றினார்

கவர்னர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். 

69_வது குடியரசு தினவிழா: தமிழக கவர்னர் தேசிய கொடியேற்றினார்

69_வது இந்திய குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

இந்த ஆண்டு முதல் முறையாக ஆசியான் அமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, லாவோஸ், மியான்மர், கம்போடியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா மற்றும் அணிவகுப்பு நடக்க உள்ளது. மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் மரியாதை செலுத்தினார். அவருடன் முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.

இதனை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் கவர்னரை வரவேற்றனர். இதனை அடுத்து, கவர்னர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். 

Read More