Home> Tamil Nadu
Advertisement

பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் அருந்திய 6 வயது சிறுவன் மற்றும் தாய் உயிரிழப்பு!

பலாப்பழம் சாப்பிட்ட உடனே குளிர்பானம் அருந்தியதால் ஆறு வயது சிறுவன் உயிரிழந்ததாக வெளியான தகவலை அடுத்து தற்போது சிறுவனின் தாயும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் அருந்திய 6 வயது சிறுவன் மற்றும் தாய் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம்  புவனகிரி அடுத்த ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது ஆறு வயது மகன் பரணிதரன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மதிய உணவு சாப்பிட்ட உடனே வேல்முருகனின் மனைவி மற்றும் குழந்தைகள் இருவர் என மூன்றுபேரும் பலாப்பழம் சாப்பிட்டதாகவும், அதன் தொடர்சியாக குளிர்பானம் அருந்தியதாகவும் கூறப்பட்டது.

இதனால் மயக்கமடைந்த அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிறுவன் பரணிதரன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஒரு பக்கம் போலீஸாரின் விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று  வேல்முருகனின் மனைவி பரணியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீஸார் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். வேல்முருகன் மனைவி பரணி குடும்ப பிரச்சனை காரணமாக குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குழந்தைகளுக்கும் கொடுத்து அவரும் குடித்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: நான் கடத்தப்பட்டேன்! நான் உத்தவ் தாக்கரேவுடன் இருக்கிறேன்: கட்சிக்கு திரும்பிய சிவசேனா எம்எல்ஏ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More