Home> Tamil Nadu
Advertisement

மாணவர்கள் நோன்பு இருக்கத் தடை...ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் ரம்ஜான் நோன்பு இருக்க கூடாது என மாணவர்களை கண்டித்த இரு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

 மாணவர்கள் நோன்பு இருக்கத் தடை...ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொரல்நத்தம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 350 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நோன்பு தொடங்கியுள்ளதால் பள்ளியில் உள்ள இஸ்லாமிய மாணவ - மாணவிகள் மதிய உணவு உண்ணாமல் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் செந்தில் என்பவர் மாணவர்களை உணவு உட்கொள்ளுவும், தண்ணீர் அருந்தவும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஹிஜாப் தீர்ப்பு; இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி: சீமான்

fallbacks

நோன்பு இருப்பதால் உணவு உட்கொள்ள முடியாது எனக் கூறி மாணவர்கள் மறுத்ததால், ஆசிரியர் சங்கர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில் 2 ஆகிய இருவரும் மாணவர்களைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, மாணவ - மாணவிகள் புகாரளித்ததைத் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இவ்விவகாரம் குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் பொன்முடி விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, கணித ஆசிரியர் சங்கர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் இருவருக்கும் வேறு பள்ளிக்கு பணி மாறுதல் வழங்கி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் போராட்டதை கைவிட்டு பெற்றோர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் படிக்க | கர்நாடகத்தில் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More