Home> Tamil Nadu
Advertisement

அப்போ கருமுட்டை திருட்டு.. இப்போ மாணவி மரணம்..! மருத்துவமனை வாசலில் போராடும் பெற்றோர்!

ஒசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்காத காரணத்தால் தங்களது 17 வயது மகள் உயிரிழந்ததாக கூறி  மருத்துவமனையின் முன்பு பெற்றோர் தர்ணா போராட்டம் நடத்தினர். என்ன நடந்தது என்பதை காணலாம்.  

அப்போ கருமுட்டை திருட்டு.. இப்போ மாணவி மரணம்..! மருத்துவமனை வாசலில் போராடும் பெற்றோர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அலசநத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள் பூஜா ஸ்ரீ. கல்லூரி முதலாமாண்டு மாணவியான இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு காய்ச்சல் மற்றும் உடற்சோற்வால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பூஜா ஸ்ரீ அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் மாணவி பூஜா ஸ்ரீக்கு அனைத்து பரிசோதனைகளும் மேற்க்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு காலை 10.30 மணியளவில் மாணவி பூஜா ஸ்ரீயின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாலை 4.30 மணியளவில்  மாணவி பூஜா ஸ்ரீக்கு திடீரென இதய அடைப்பு ஏற்ப்பட்டு கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | வாச்சாத்தி வழக்கு: 30 வருட போராட்டத்துக்கான அதிரடி தீர்ப்பும்... பின்னணியும்! - வென்ற நீதி!

மேலும், வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து மாணவி பூஜா ஸ்ரீயை வெண்டிலேட்டர் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் ஒசூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பெற்றோர் அனுமதித்துள்ளனர். அப்போது அம்மருத்துவமனை மருத்துவர்கள் மாணவி பூஜா ஸ்ரீயை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதால தெரிவித்துள்ளனர்.

fallbacks

மேலும், முதலில் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் மாணவிக்கு இதயத்தை துடிக்க வைக்கும் ஊசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் பெற்றோர்கள் அந்த மருத்துவமனையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

நள்ளிரவு முதல் மாணவிக்கு சிகிச்சை அளித்தும், பிரச்சனைகளை முன்கூட்டியே கூறாமால் 15 மணிநேர சிகிச்சைக்கு பிறகு தான் பிரச்சனைகளை கண்டறிய முடிந்ததா எனக் கேள்வி கேட்டு அச்சிறுமியின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

fallbacks

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒசூர் நகர போலீஸார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்படும் என மாணவியின் பெற்றோரிடம் உறுதியளித்தனர். முன்னதாக இந்த மருத்துவமனை ஈரோடு சிறுமியிடம் கருமுட்டை வாங்கிய விவகாரத்தில் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க | கர்நாடகா பந்த்: காவிரி போராட்டத்துக்கு மூலகாரணமே பாஜக தான் - திமுக பகிரங்க குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More