Home> Tamil Nadu
Advertisement

கோயில்களில் திருடப்பட்ட 11ம் நூற்றாண்டை சேர்ந்த சிலைகள் மீட்பு!

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் 11ம் நூற்றாண்டை சேர்ந்த சுமார் 40 கோடி மதிப்புள்ள 11 சிலைகளை கைப்பற்றி, ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோயில்களில் திருடப்பட்ட 11ம் நூற்றாண்டை சேர்ந்த சிலைகள் மீட்பு!

தமிழக சிலைத் திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநராக ஜெயந்த் முரளி பதவியேற்றத்திற்கு பிறகு கடந்த மாத இறுதியில் 500 கோடி மதிப்பிலான மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தஞ்சையைச் சார்ந்த ஒருவரது வங்கி லாக்கரில் இருந்ததை கண்டுபிடித்து மீட்டனர். அதை தொடர்ந்து சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் 11ம் நூற்றாண்டை சேர்ந்த சுமார் 40 கோடி மதிப்புள்ள 11 சிலைகளை கைப்பற்றி, மேலும் சில சிலைகளை மீட்க ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

fallbacks

இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் மாமல்லபுரத்திற்கு அருகில் உள்ள Ideal Beach Resort-ல் அமைந்துள்ள Indian Cottage Industries என்ற நிறுவனத்தில், தமிழ் நாட்டில் உள்ள மிகவும் பழமையான இந்துக் கோயில்களில் இருந்து களவாடப்பட்டு கொண்டு வரப்பட்ட தொன்மையான உலோகச் சிலையை, சட்டத்திற்குப் புறம்பாக வெளி நாடுகளுக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சிலைத் திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில், சிலை திருட்டுத் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் பொன்னி மேற்பார்வையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்நடராஜன் தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜா, காவல் துணை கண்காணிப்பாளர் மோகன், காவல் ஆய்வாளர் தமிழ் செல்வி மற்றும் காவல் துறையினர்  Indian Cottage நிறுவனத்திற்கு கடந்த 24 ஆம் தேதி சென்று அந்தக் கடையின் உரிமையாளர் ஜாவித் ஷா என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

fallbacks

விசாரணையில் அவர் தனது கடையில் பதுக்கி வைத்திருந்த மிகவும் தொன்மையான 11 உலோகச் சிலைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். மேலும் அந்த சிலைகள் அவருக்கு எப்படி கிடைத்தது என்ற விவரமும் அவரிடம் இருந்த ASI நிறுவனத்தாரால் Suspected to be an antiquity என்று சான்று வழங்கப்பட்ட ஐந்து சிலைகளுக்கான படிவத்தையும் ஒப்படைத்தார். மேற்கண்ட 11 உலோக சிலைகளையும் ஜாவித்ஷா சட்டத்திற்கு புரம்பாக விற்பனை செய்து விட்டதை கண்டுபிடித்த காவல்துறையினர் அன்றைய தினமே 11 உலோகச் சிலைகளையும் நான்கு ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். 

fallbacks

பின்னர் நடைபெற்ற புலன் விசாரணையின் தொடர்ச்சியாக நேற்று (10ஆம் தேதி) ஜாவித் ஷா நின்ற நிலையில் இருந்த பழமையான பார்வதி உலோகச் சிலையை ஒப்படைத்தார். அவர் இன்னும் 4 தொன்மையான உலோகச் சிலைகளை ஒப்படைக்காததால் 
ஜாவித் ஷா இன்று கைது செய்யப்பட்டு மேற்கொண்டு அவரிடம் கைப்பற்றப்பட்ட சிலைகள் எந்தெந்த கோயில்களில் திருடப்பட்டது என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மீட்கப்பட்ட 11 சிலைகளில் 8 தொன்மையான சிலைகளின் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட சிலைகளில் 11ஆம் நூற்றாண்டு சிலைகளும் உள்ளது என்றும், நாடு முழுவதுமே வெறும் 5 ராணவன கோயில்கள் மட்டுமே உள்ள நிலையில் இராவணன் பத்து தலை உள்ள சிலை மிகவும் மதிப்பு மிக்கது என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | கொரோனா அச்சம் காரணமாக குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி; இருவர் பலி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More