Home> Sports
Advertisement

உலக கோப்பை 2023: இந்த 4 டீம் அரையிறுதி கன்பார்ம்! அடித்துச் சொல்லும் ரசிகர்கள்

உலக கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் குறித்த கணிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கும் நிலையில், உத்தேசமாக இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.   

உலக கோப்பை 2023: இந்த 4 டீம் அரையிறுதி கன்பார்ம்! அடித்துச் சொல்லும் ரசிகர்கள்

உலக கோப்பை லீக் போட்டியில் எல்லா அணிகளும் கிட்டத்தட்ட 3 போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டன. இந்திய அணியைப் பொறுத்தவரையில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கம்பீரமாக முதல் இடத்தில் இருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என எல்லா துறையிலும் டாப் கிளாஸில் இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. முதலில் விளையாடினாலும், சேஸிங் செய்தாலும் இந்திய அணி வெற்றியை மட்டுமே பெறுகிறது. இரண்டு போட்டிகளில் இதுவரை சேஸிங் செய்து வென்றிருக்கிறது இந்தியா. இதனால் இந்திய அணி நிச்சயம் அரையிறுதிக்கு செல்லும் என்பது தான் பெரும்பாலானோரின் கணிப்பு.

மேலும் படிக்க | மதம்கொண்ட யானை... அகமதாபாத்தை அலறவிட்ட ரோஹித் - அம்பயரிடம் சீன் காட்டிய மாஸ் சம்பவம்!

அடுத்ததாக நியூசிலாந்து அணி. இந்த அணியும் உலக கோப்பை 2023 தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ரன்ரேட் அடிப்படையில் மட்டுமே முதல் இடத்தில் இருந்துபின் தங்கியிருக்கிறது நியூசிலாந்து. ஐசிசி தொடர்களில் எப்போது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியான நியூசிலாந்து இம்முறையும் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறது. இதனால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கான வாய்ப்பில் பிரகாசமாக இருக்கிறது. பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக இருக்கிறது நியூசிலாந்து.

தென்னாப்பிரிக்கா அணி, இம்முறை சரவெடியாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் விளையாடிய போட்டிகளில் அதிரடி போக்குடன் களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் ஒரு அணி என்றால் அது தென்னாப்பிரிக்கா தான். கேப்டன் பவுமா தலைமையில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. பேட்டிங், பந்துவீச்சு தரமாக இருக்கிறது தென்னாப்பிரிக்கா அணியிடம். இதனால் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

நான்காவது இடத்துக்கு இரண்டு அணிகள் மத்தியில் கடும் போட்டி இருக்கிறது. பாகிஸ்தான் அல்லது இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஏதேனும் ஒன்று அரையிறுதிக்கு முன்னேறும் என்பது பலரின் யூகமாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் சராசரியாக தான் இருக்கிறது. அதேபோல் இங்கிலாந்து அணியின் பேட்டிங் சூப்பராக இருந்தாலும் பந்துவீச்சு சராசரியாக இருக்கிறது. இதனால் இரு அணிகளும் இப்போதைக்கு கணிக்க முடியாத இடத்தில் இருக்கின்றன. இப்போதைய சூழலில் இரு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. அதனை எந்த அணி பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

மேலும் படிக்க | 'வந்த இடம் என் காடு...' பாகிஸ்தான் தான் பலியாடு - ஆதிக்கத்தை தொடரும் இந்தியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More