Home> Sports
Advertisement

16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு நோ-பால் கூட வீசாத இந்திய வீரர்

16 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறைகூட நோபால் வீசாத இந்திய பந்துவீச்சாளர் யார் என்பதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 

16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு நோ-பால் கூட வீசாத இந்திய வீரர்

கிரிகெட்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சரிநிகர் பங்குண்டு. ரன் அடிப்பது பேட்ஸ்மேன் கடமை என்றால், அந்த ரன்கள் அடிக்காமல் பேட்ஸ்மேனைக் கட்டுப்படுத்துவது பவுலர்களின் திறமை. இதில், பந்துவீசும்போது பவுலர்கள் சில தவறுகளை செய்ய வாய்ப்பிருக்கிறது. நோபால், வைடு உள்ளிட்ட பந்துகளை வீசும்போது எதிரணியினருக்கு கூடுதல் ரன்களாக மாறும். இப்படியான எக்ஸ்டிரா ரன்கள் ஒருப்போட்டியின் முடிவைக் கூட மாற்றக்கூடியவையாக அமைந்துவிடும். 

ஆனால் பல பந்துவீச்சாளர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு நோ பால் கூட வீசாதவர்கள் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்திய பந்து வீச்சாளர் ஒருவரும் இந்த சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.

மேலும் படிக்க | ஐபிஎல்-காக மொத்த அணியையும் மாற்றிய தென் ஆப்பிரிக்கா!

யார் அந்த வீரர்? 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், 1983 உலகக் கோப்பை வென்றவருமான கபில் தேவ் தான் அந்த சாதனைக்கு சொந்தக்காரர். கபில்தேவ் 1978 முதல் 1994 வரை 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். ஆனால், தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் ஒரு நோ பால் கூட வீசவில்லை. இந்த சாதனையை படைத்த ஒரே இந்திய பந்து வீச்சாளர் கபில்தேவ் மட்டுமே.

fallbacks

முதல் உலகக்கோப்பை

1983-ல் இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் கபில் தேவ். இந்தியாவுக்காக 131 டெஸ்ட் மற்றும் 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 5248 ரன்களும், ஒருநாள் போட்டியில் 3783 ரன்களும் எடுத்தார். ஆல்ரவுண்டரான அவர் பேட்டிங்கில் ஜொலித்தது போலவே பந்துவீச்சிலும் ஜொலித்தார். 434 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், ஒருநாள் போட்டியில் 253 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

மற்ற பந்து வீச்சாளர்கள் யார்? 

உலகில் கபில்தேவ் தவிர, ஒரு நோ பால் கூட வீசாத 4 பந்துவீச்சாளர்கள் உள்ளனர். மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லான்ஸ் கிப்ஸ், ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி, இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆல்-ரவுண்டர் இயன் போத்தம், பாகிஸ்தானின் கேப்டனாக இருந்த இம்ரான் கான் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் நோ பால் வீசாத பந்து வீச்சாளர்களே இருக்க மாட்டார்கள்.

மேலும் படிக்க | சச்சின் செஞ்சுரி அடிச்சாவே இந்தியா தோத்துடுமா? - உண்மை என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More