Home> Sports
Advertisement

அலஸ்டைர் குக் சாதனைகள் என்ன? இவருக்கும் இந்தியாவுக்கு என்ன தொடர்பு?

இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் 33 வயதான அலஸ்டைர் குக், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  யார் இந்த அலஸ்டைர் குக்? இவரின் சாதனைகள் என்ன? பார்ப்போம்.

அலஸ்டைர் குக் சாதனைகள் என்ன? இவருக்கும் இந்தியாவுக்கு என்ன தொடர்பு?

டெஸ்ட் போட்டியில் நல்ல ரன்களை அடித்துள்ள குக், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தான் இவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். 

இந்தியாவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆரம்பித்த அலஸ்டைர் குக், இந்தியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியும் விளையாட உள்ளார். அவரை பற்றி சில விவரங்களை பார்ப்போம்.

1984 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்த அலஸ்டைர் குக், மூன்று விதமான 256 சர்வதேச கிரிக்கெட் போட்டி விளையாடி உள்ளார். அதில் நான்கு டி-20 போட்டியும், 92 ஒருநாள் போட்டியும், 160 டெஸ்ட் போட்டியும் அடங்கும். இங்கிலாந்து அணியின் டெஸ்ட் வீரர்களில் சிறந்த வீரர்ராக விளங்கினார்.

டி-20 போட்டியை பொருத்த வரை பெரியாதாக விளையாட வில்லை. ஒருநாள் போட்டியை பொருத்த வரை 92 போட்டிகளில் விளையாடி 3204 ரன்கள் அடித்துள்ளார். அதில் ஐந்து சதங்களும், 19 அரை சதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 137 ரன்கள் எடுத்துள்ளார். இது பாகிஸ்தானுக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு அடித்தார். ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஒரு சதமும் அடித்துள்ளார். இவர் தனது முதல் ஒரு நாள் போட்டி இலங்கைக்கு எதிராக விளையாடி உள்ளார்.

டெஸ்ட் போட்டி மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த அலஸ்டைர் குக், முதல் டெஸ்ட் போட்டி 2006 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் விளையாடினார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 60 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 104* ரன்கள் எடுத்து நாட்-அவுட் ஆகா இருந்தார். தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

டெஸ்ட் போட்டியை பொருத்த வரை இதுவரை 160 போட்டிகளில் விளையாடி 12,254 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 32 சதங்களும், 56 அரை சதங்களும் அடங்கும். ஐந்து முறை 200 ரன்களுக்கு மேலாகா அடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 294 ரன்கள் எடுத்துள்ளார். அதுவும் இந்தியாவுக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு எடுத்தார். இந்தியாவுக்கு எதிராக ஆறு சதங்களை அடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இவரது சராசரி 44.88 ஆகும். 

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த ஆறாவது வீரராக உள்ளார். இங்கிலாந்தை பொருத்த வரை அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். 59 டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். அதில் 24-ல் வெற்றியும், 22-ல் தோல்வியும், 13 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இரண்டு முறை இவரது தலைமையில் ஆஷிஷ் தொடரை வென்று தந்துள்ளார்.

Read More