Home> Sports
Advertisement

விராட் கோலி ஓய்வை தள்ளிப்போட ஓய்வெடுக்கிறார் - டிவில்லியர்ஸ்

விராட் கோலி தன்னுடைய ஓய்வை தள்ளிப்போட இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுத்திருக்கிறார் என தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் நட்சத்திரம் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.   

விராட் கோலி ஓய்வை தள்ளிப்போட ஓய்வெடுக்கிறார் - டிவில்லியர்ஸ்

தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் விராட்கோலிக்கு ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கும் அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பிசிசிஐ விராட் கோலிக்கு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுத்துள்ளது. 20 ஓவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 2022 ஆம் ஆண்டு உலக கோப்பை தோல்விக்குப் பிறகு அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பிடித்துள்ளார் கோலி. 

மேலும் படிக்க | உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கேப்டன் ரோஹித் வாய்ப்பளிக்கவில்லை -அஸ்வின்

இதனால் கோலியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா? என்ற கோணத்தில் யோசிக்க தொடங்கியுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ், விராட்  கோலிக்கும் ஓய்வு அவசியம் என தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பதால் நிச்சயம் அவருக்கும் சோர்வு இருக்கும். அதனால் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது தான் என்றும் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இறுதி அத்யாயத்தை தொடங்க இருப்பதால், அதில் தன்னை நீண்ட காலம் நிலை நிறுத்திக் கொள்ள இப்படியான ஓய்வு அவசியம் என்றும் கூறியுள்ளார்.

இதன்மூலம் விராட் கோலி தன்னுடைய இறுதி அத்தியாயத்தில் நீண்ட காலம் விளையாட முடியும் என்றும் ஏபிடி கூறியிருக்கிறார். விராட் கோலி எப்போது ஓய்வு பெறுவார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவரால் முடிந்தளவுக்கு நிச்சயம் இன்னும் சில ஆண்டுகாலம் விளையாடுவார் என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். விராட் கோலியை பொறுத்தவரை நடந்து முடிந்த 20 ஓவர் உலக கோப்பை முழுவதும் சிறப்பாக விளையாடினார். இம்முறை உலக கோப்பையை தவற விட்டுவிடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருந்தாலும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியதால் அவரின் கனவுக் கோட்டை தகர்ந்தது. 

மேலும் படிக்க | IND vs SA: தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! மூன்று கேப்டன்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More