Home> Sports
Advertisement

IND vs PAK: ஊடகவியலாளர்களின் இந்த கேள்விக்கு கடுப்பான விராட் கோலி

2021 டி 20 உலகக் கோப்பையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சிறந்த போட்டி இன்று நடைபெறுகிறது. 

IND vs PAK: ஊடகவியலாளர்களின் இந்த கேள்விக்கு கடுப்பான விராட் கோலி

புதுடெல்லி: ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 க்குப் (ICC T20 World Cup 2021)  பிறகு மிகக் குறுகிய கால கட்டத்தில் விராட் கோலி (Virat Kohli) இந்திய அணியின் (Team India) கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். இருப்பினும், இது தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் தற்போது வரை விராட் கோலி அறிவிக்கவில்லை.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் (India vs Pakistan) இடையேயான போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது இந்திய அணியின் (Team India) கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை பற்றி எந்த விவாதத்திலும் ஈடுபட விராட் கோலி (Virat Kohli) மறுத்துவிட்டார். 

ALSO READ | IND vs PAK: டி20 உலக கோப்பை - இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்; யாருக்கு வெற்றி?

பதவி விலகல் தொடர்பாக விராட் கோலி (Virat Kohli) செப்டம்பரில் தனது முடிவை அறிவித்தார், அதன் பிறகு மாபெறும் விவாதங்கள் நடக்கத் தொடங்கின. ஆனால் சனிக்கிழமையன்று, பத்திரிகையாளர்களின் ஆலோசனையின் போது, இந்த பிரச்சினையில் சர்ச்சையை எதிர்பார்ப்பவர்களுக்கு எவ்வித கிசுகிசுபையும் கொடுக்க மாட்டேன் என்று கூறினார்.

விராட் கோலி இந்த விவகாரம் குறித்து முன்பே நிறைய பேசியிருப்பதாகவும், இப்போது இந்த விவகாரம் குறித்து விவாதம் செய்யும் மனநிலையில் இல்லை என்றும் கூறினார். கேப்டன் பதவி குறித்த கேள்விக்கு கடுப்பான கோலி, இந்த நேரத்தில் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவதிலேயே எங்கள் கவனம் உள்ளது என்றார்.

இதற்கிடையில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் (T20 World Cup) போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. சூப்பர்-12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் இந்தியாவும், ஒன்றில் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | T20 World Cup பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் கதாநாயகர்கள் யார்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More