Home> Sports
Advertisement

Pink பந்து டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்தியர்... விராட் கோலி!

பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் எனும் பெருமை பெற்றார் விராட் கோலி!

Pink பந்து டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்தியர்... விராட் கோலி!

பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் எனும் பெருமை பெற்றார் விராட் கோலி!

வங்கதேச அணிக்கு எதிராக ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி) இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி 136(194) ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் பிங்க் பந்து டெஸ்ட் கிரெக்கட் சதம் அடித்த முதல் இந்தியர் எனும் பெருமையினை அவர் பெற்றுள்ளார்.

மேலும் இதுவரையிலான போட்டிகளில் 26 டெஸ்ட் சதங்களை பூர்த்தி செய்திருந்த விராட் கோலி, இன்றைய போட்டியில் பதிவு செய்த சதத்தின் மூலம் தனது 27-வது சதத்தினை பூர்த்தி செய்தார். முன்னதாக., முதல் நாள் ஆட்டத்தில் இந்திய இன்னிங்ஸின் போது கோலி தனது 32-வது ரன் எடுத்தபோது விராட் கோலி ஒரு அணியின் கேப்டனாக இருந்து வேகமாக 5,000 டெஸ்ட் ரன்களை’ எட்டிய வீரர் எனும் பெருமையினையும் பெற்றார்.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 106 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் ஒரே ஒரு அமர்வின் கீழ் அந்த ரன்களை இந்தயா முந்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா முறையே 14 மற்றும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கோலி மற்றும் சடேஷ்வர் புஜாரா இந்தியாவை முன்னிலை பெற செய்தனர். 

முன்னதாக, வங்கதேச அணியின் சரிவை உறுதிபடுத்தியது இஷாந்த் சர்மா தான். 22 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது மூலம் அவர் வங்கதேச அணியை நிலைகுலைய வைத்தார். வங்கதேச இன்னிங்ஸின் போது வீசப்பட்ட 30.3 ஓவர்களில், ஒரு ஓவர் மட்டுமே ஒரு சுழற்பந்து வீச்சாளரால்(ரவிந்திர ஜடேஜா) வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்தியா ஆரம்பம் முதலே ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கோலிக்கு துணையாக ரஹானே நின்று விளையாடி 51(69) ரன்கள் குவித்தார். எனினும் விராட் கோலியின் விக்கெட்டுக்கு பின்னர் இந்தியா அடுத்தடுத்து விக்கட்டுகளை இழக்க துவங்கியது. வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ரன்கள் ஏதும் இன்று வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

Read More