Home> Sports
Advertisement

ரன் அடிக்காத நேரத்தில் ரிஷப் பன்டை சீண்டும் முன்னாள் காதலி

பார்ம் இல்லாத நேரத்தில் ரிஷப் பன்டை மீண்டும் ஒருமுறை சீண்டியிருக்கிறார், அவரின் முன்னாள் காதலியான ஊர்வசி ரவுடேலா.   

ரன் அடிக்காத நேரத்தில் ரிஷப் பன்டை சீண்டும் முன்னாள் காதலி

Urvashi Rautela relationship: இந்திய அணியின் இளம் வீரராக இருக்கும் ரிஷப் பன்ட் வொயிட் பால் கிரிக்கெட்டில் ரன் எடுக்க திணறி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடும் அவரால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எதிர்பார்த்தளவுக்கு ரன்களை குவிக்க முடியவில்லை. கடந்த ஓராண்டாகவே பலமுறை அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டபோதும், இந்திய அணிக்காக எந்தவொரு பெரிய இன்னிங்ஸூம் அவரிம் இருந்து வரவில்லை. கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய தொடரிலும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து சொதப்பினார்.

மேலும் படிக்க | என்னது சிஎஸ்கே-வின் அடுத்த கேப்டன் ஜடேஜா இல்லையா? புதிய ட்விஸ்ட்!

இதனால் அவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அவருக்கு பதிலாக இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு போதுமான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர். அதிக வாய்ப்புகளை பெற்றும் விளையாடாத ரிஷப் பன்டை பிசிசிஐ தாங்கிப் பிடிப்பது ஏன் என கேள்வி எழும்பியுள்ள நிலையில், அவரின் முன்னாள் காதலியான ஊர்வசி ரவுடேலாவும் சீண்டியுள்ளார்.

fallbacks

இருவரும் நீண்ட நாட்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். பின்னர் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்பால் ஊர்வசி ரவுடேலாவை விட்டு ரிஷப் பன்ட் பிரிந்ததாக கூறப்படுகிறது. பேட்டி ஒன்றில் கூட, ரிஷப் பன்ட் தனக்காக பல மணி நேரம் காத்திருந்ததாகவும், ஆனால் அவரை நான் சந்திக்கவில்லை என தெரிவித்தார். இதற்கு ரிஷப் பன்ட் அண்மையில் பதிலடி கொடுத்தது இணையத்தில் பேசுபொருளான நிலையில், இப்போது மீண்டும் ரிஷப் பன்டை வம்புக்கு இழுத்துள்ளார் ஊர்வசி ரவுடேலா.

fallbacks

"எனக்கு ரிஷப் பன்டை யார் என்றே தெரியாது. அவரை எல்லோரும் ஆர்பி என அழைப்பதும் எனக்கு தெரியாது. நான் பாசமாக ஆர்பி என குறிப்பிடுவது என்னுடன் நடித்த சக நடிகரான ராம் பொதினேனி-ஐ தான். என்னைப் பற்றி சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள். அதனை மக்கள் நம்புவதற்கு முன்பு உண்மையை தெரிந்து கொள்ள முன்வரவேண்டும்" என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகப்போகும் புதிய ரூல்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More