Home> Sports
Advertisement

அந்த போட்டியுடன் அவ்வளவு தான்... ஓய்வை அறிவித்த பிரபல வீரர் - கவலையில் ரசிகர்கள்!

David Warner Retirement: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் தனது ஓய்வு குறித்த பொதுவெளியில் இன்று தெரிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களை சற்று கவலையடைய செய்துள்ளது.

அந்த போட்டியுடன் அவ்வளவு தான்... ஓய்வை அறிவித்த பிரபல வீரர் - கவலையில் ரசிகர்கள்!

David Warner Retirement: இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் 7ஆம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 

இதையொட்டி, லண்டனில் இரு அணி வீரர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீர்ர டேவிட் வார்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாட விரும்புவதாக கூறினார்.

பாகிஸ்தான் தொடர் தான் கடைசி

பாகிஸ்தான் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி, மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாடும், ஆனால் அந்த தொடரின் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம் என்று வார்னர் தெளிவுபடுத்தினார். மேலும் அவர் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறார் எனவும் தெரிகிறது.

மேலும் படிக்க | ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் உறவுகள்! பஞ்சாயத்து செய்யும் ICC அதிகாரிகள்

ரெட் பாலுக்கு டாட்டா

வார்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அணியில் இருந்தால் ரன்களை அடிக்க வேண்டும், அல்லவா. 2024ஆம் ஆண்டு நடைபெறஉந் உலகக் கோப்பை எனது இறுதி ஆட்டமாக இருக்கும் என்று நான் எப்போதும் கூறியிருக்கிறேன். எனக்கும், எனது குடும்பத்துக்கும் நான் கடன்பட்டிருப்பேன். இங்கு ரன்களை குவித்து ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து விளையாட முடிந்தால், மேற்கு இந்திய டெஸ்ட் தொடரில் இருந்து டெஸ்டில் நான் விளையாட மாட்டேன் என்று உறுதியாக கூற முடியும். என்னால் WTC இறுதிப்போட்டி மற்றும் ஆஷஸ் தொடரை கடந்து பாகிஸ்தான் தொடரிலும் சிறப்பாக விளையாட முடிந்தால், அதோடு நான் நிச்சயமாக முடித்துக்கொள்வேன்" என்றார். 

லீக் கிரிக்கெட் தொடரும்...

ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்கும்போது, 2024ஆம் ஆண்டில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தனது இறுதி தொடராக இருக்கும் என்று வார்னர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், அவர் உலகம் முழுவதும் உள்ள டி20 லீக்கில் விளையாடுவார் என தெரிகிறது. 

நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி மோசமாக விளையாடியது. 16 போட்டிகளில் 6இல் வெற்றி, 8இல் தோல்வி என 14 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தோடு நிறைவு செய்தது. இருப்பினும், அந்த அணிக்காக டேவிட் வார்னர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டேவிட் வார்னர் 14 போட்டிகளில் விளையாடி, 516 ரன்களை குவித்தார். அதில் 6 அரைசதங்கள் அடங்கும். 

மேலும் படிக்க | WTC Final 2023: இவங்க விளையாடிவிட்டால் இந்தியா வெற்றியை தடுக்க முடியாது - ரிக்கி பாண்டிங்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More