Home> Sports
Advertisement

இந்தியா மீது அணுகுண்டை வீசுவதாக அச்சுறுத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்...

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் Javed Miandad பிரபலமானவர், தனது தொழில் வாழ்க்கையில் நிறைய புகழ் பெற்றவர், ஆனால் அவரது துணிச்சல் காரணமாக  பலமுறை இக்கட்டுகளையும் சந்தித்தவர்...

இந்தியா மீது அணுகுண்டை வீசுவதாக அச்சுறுத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்...

புதுடெல்லி: கிரிக்கெட் உலகில் பல வீரர்கள் தங்கள் துணிச்சலால் பல முறை சிக்கலில் சிக்கியுள்ளனர். இந்த பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனெனில் அண்டை நாடான இந்தியா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது அள்ளித் தெளித்து, தலைப்புச் செய்திகளில் இடம் பிடிப்பார்கள். ஆனால், தங்கள் துணிச்சலால் ட்ரோல் ஆவார்கள். 

பாகிஸ்தானின் புகழ்பெற்ற பேட்ஸ்மேன் ஜாவேத் மியாந்தாத்தும் தனது வாய்ச்சவடால் காரணமாக பலமுறை ட்ரோல் செய்யப்பட்டார். இந்தியாவுக்கு எதிராக அவர் கூறிய பொறுப்பற்ற கருத்துகளுக்காக பலரும்  கண்டனம் தெரிவித்தனர்.  

கடந்த ஆண்டு, அதாவது 2019 ஆகஸ்ட் மாதம், ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை இந்திய அரசு நீக்கியபோது, வெறும் வாயை மெல்லும் பாகிஸ்தானுக்கு இந்த விஷயம் தீனி போட்டது. தடி எடுத்தவன் தண்டல்காரன் என்று சொல்வது போல, பாகிஸ்தானில் பலரும் பலவிதமாக கருத்துக்களை அள்ளித் தெளித்தனர்.

இந்தியா காஷ்மீரில் இருந்து சட்டப்பிரிவு 370ஐ வாபஸ் பெற்றபோது, இந்தியா மீதான தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்குக் ஆதரவு என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் Javed Miandad தெரிவித்தார்.  ஒரு நேர்காணலின் போது, இந்தியா ஒரு கோழைத்தனமான நாடு என்று சகட்டுமேனிக்கு வார்த்தைகளை கொட்டித் தீர்த்தார். அது மட்டுமா? இந்தியா மீது அணுகுண்டு வீடுவதாக பூச்சாண்டியும் காட்டினார்.  

Read Also | பாலிவுட்டில் நடிக்கைகளுடன் காதல் கொண்ட இந்த 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

அந்த நேர்காணலில்போது ”இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு என்ன செய்தி கொடுக்க விரும்புகிறார் Javed Miandad?” என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜாவேத், 'இந்தியா ஒரு கோழை நாடு என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அவர் இதுவரை என்ன செய்தார்? நாங்கள் அணுகுண்டுகளை விளையாட்டுக்காக வைத்திருக்கவில்லை, அதை பயன்படுத்துவதற்காகவே வைத்திருக்கிறோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் எல்லாவற்றையும் அழிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவு வாபஸ் பெற்றதிலிருந்து, பாகிஸ்தான் ஆட்டம் கண்டு போயுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மட்டுமல்ல, Shahid Afridiயும்  ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வழங்கியுள்ளார். அதேபோல் Javed Miandad தனது நேர்காணலில், ஜாவேத் மியாந்தாத்தும் இந்தியாவை சுட்டிக்காட்டி, உங்களிடம் உரிமம் பெற்ற ஆயுதங்கள் இருந்தால், நீங்கள் தாக்கலாம் என்று கூறினார். எப்படியிருந்தாலும், உங்கள் பாதுகாப்புக்காக எங்களை தாக்க வேண்டியிருக்கும். ஆனல் சடலங்கள் வீடுகளுக்குச் செல்லும்போதுதான் அவர்கள் அதை உணர்ந்து கொள்வார்கள்” என்று தெரிவித்திருந்தார். 

நிச்சயமாக, Javed Miandad கிரிக்கெட் களத்தில் பாகிஸ்தானுக்காக பல அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடினார். ஆனால் இந்தியா பற்றிய அவரது அறிக்கை அவரை எல்லா இடங்களிலும்  clean bowled ஆக்கிவிட்டது.

Read More