Home> Sports
Advertisement

அட பாவமே! பாண்டியாவால் அணியில் நீக்கப்பட்ட ஷர்துல்! நியூஸி-க்கு எதிரா இந்தியாவின் பிளேயிங் லெவன்

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் எதிர்பார்த்தைப் போலவே ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு முகமது ஷமிக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  

அட பாவமே! பாண்டியாவால் அணியில் நீக்கப்பட்ட ஷர்துல்! நியூஸி-க்கு எதிரா இந்தியாவின் பிளேயிங் லெவன்

உலக கோப்பை  21வது லீக் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் தர்மசாலாவில் மோதுகின்றன. இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரு மாற்றங்கள். ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியா காயமடைந்திருப்பதால் அவரால் இப்போட்டியில் விளையாட முடியாது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதனால் அவருக்கு பதிலாக அணியில் யாரை கொண்டு வருவார்கள் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேட்டபோது, ஹர்திக் பாண்டியா பவுலரா? பேட்ஸ்மேனா? என்றால் அவர் பேட்டிங் ஆல்ரவுண்டர் தான், அதனால் அவருக்கு பதிலாக சூர்ய குமார் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என கூறினார். 

மேலும் படிக்க | IND vs NZ: தர்மசாலாவில் டாஸ் ஜெயித்தால் ரோகித் சர்மா என்ன செய்யணும்? சேஸிங் செய்யலாம் - ஏன்?

காரணம், இந்திய அணியின் கீழ் நிலை பேட்ஸ்மேன்களில் மிகவும் தரமான பிளேயர் மற்றும் சேஸிங்கில் அணியை வெற்றிக்கு அழைத்துச் திறன் ஆகியவை சூர்யகுமார் யாதவிடம் இருக்கிறது. இஷான் கிஷன் அப்படியான ரோலில் ஐபிஎல் தொடரில் உள்ளிட்ட எந்த போட்டியிலும் விளையாடியது இல்லை. ஆனால் சூர்யகுமார் யாதவ் லோ ஆர்டரில் தான் பல போட்டிகளில் விளையாடி, அணிகளை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதனடிப்படையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சூர்யகுமார் யாதவுக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். அடுத்தபடியாக ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு, முகமது ஷமி பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருக்கிறார்.

ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக பேட்டிங் சூர்யகுமார் வந்திருப்பதால், ஷர்துல் தாக்கூருக்கு பதில் முகமது ஷமியை கொண்டு வந்திருக்கின்றனர். காரணம் பேட்டிங் பலமாக இருக்கிறது. ஷர்துல் தாக்கூரும் பெரிய அளவில் இந்த தொடரில் பந்துவீசவில்லை. ஒரு சில ஓவர்கள் மட்டுமே வீசினார். பேட்டிங் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழலில் தான் ஷமிக்கு வாய்ப்பு கொடுத்தால் பவுலிங்கில் இந்திய அணி இன்னும் பலமாக இருக்கும் என்கிற அடிப்படையில் அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஹர்திக் பாண்டியா காயமடையாமல் இருந்திருந்தால் பிளேயிங் லெவனில் மாற்றம் வந்திருக்காது. ஷர்துல் தாக்கூரும் அப்படியே இருந்திருப்பார். பாண்டியா காயமடைந்ததால் ஷர்துல் தாக்கூரின் இடமும் இந்திய அணியில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, இப்போது வெளியேற்றப்பட்டிருக்கிறார்.   

மேலும் படிக்க | IND vs NZ: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கடைசி நேரத்தில் வரப்போகும் மாற்றம்! இந்த வீரர் சந்தேகம் தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More