Home> Sports
Advertisement

புரோ கபடி லீக் 2017: தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுகம்!!

புரோ கபடி லீக் 2017: தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுகம்!!

சென்னையில் இன்று தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.

கடந்த 2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கின் 5-ஆவது சீசனில் முதல் முறையாக கூடுதலாக நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 12 அணிகள் இந்த சீசனில் விளையாடுகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.

இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பரத் தூதராக நடிகர் கமல்ஹாசன் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார். கோட்டை தாண்டி புகழை சூடுங்கள் என தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா இன்று பிற்பகலில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சியை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த விழாவில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், அல்லு அர்ஜுன் மற்றும் அல்லு அர்விந்த் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஏ பிரிவு அணிகள்: தபாங் டெல்லி, ஜெப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், யு மும்பா, ஹரியாணா ஸ்டீலர்ஸ், குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் 

பி பிரிவு அணிகள்: தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், யுபி யோதாஸ், தமிழ் தலைவாஸ்.

Read More