Home> Sports
Advertisement

டி20 உலகக் கோப்பை: வீரர்களை கண்காணிக்க ஐசிசியின் புதிய முடிவு!

டி20 உலகக் கோப்பையின் போது வீரர்களின் உடல் நலத்தை மட்டுமல்லாது மன நலனையும் கண்காணிப்பதற்காக உளவியலாளர்கள் ஐசிசி நியமிக்க உள்ளது.

டி20 உலகக் கோப்பை: வீரர்களை கண்காணிக்க ஐசிசியின் புதிய முடிவு!

கிரிக்கெட் வீரர்களின் உடல்நலனை கண்காணிக்க அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐசிசியும் மருத்துவர்களை நியமிக்கும்.  இந்நிலையில் டி20 உலகக் கோப்பையின் போது வீரர்களின் உடல் நலத்தை மட்டுமல்லாது மன நலனையும் கண்காணிப்பதற்காக உளவியலாளர்கள் ஐசிசி நியமிக்க உள்ளது.

டி20 உலகக் கோப்பை ஓமன் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ளது.  இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பயோ பபுள் சூழலில் தங்கியிருக்கும்போது கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்படும் மனநல பிரச்சனைகள் குறித்து ஆலோசனை வழங்க ஐசிசி உளவியலாளர்கள் நியமிக்க உள்ளதாக ஐசிசியின் மூத்த அதிகாரி அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார்.

fallbacks

தற்போதைய பெருந்தொற்று சூழலில் கிரிக்கெட் வீரர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் தங்களுக்குள்ளேயே தனிமைபடுத்தும் சூழலை உருவாக்கி அதற்குள்ளேயே இருந்து வருகிறார்கள்.  இந்த பயோ பபுள் சூழல் காரணமாக வீரர்கள் பலர் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.  இந்த மன அழுத்தம் காரணமாக வீரர்களால் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது, அதோடு அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டு வரவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் வீரர்களுக்கு 24 மணி நேரமும் மனநல ஆலோசனை வழங்குவதற்காக உளவியலாளர்கள் ஐசிசி நியமித்துள்ளது.  வரும் 17ம் தேதி முதல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது.  அக்டோபர் 24ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெற உள்ளது. 

ALSO READ T20 உலகக் கோப்பை தொடங்கியவுடன் விதிகளில் மாற்றம் செய்யப்படும் - ICC

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More