Home> Sports
Advertisement

Kabaddi: விளையாட்டு மைதானத்தில் உயிரிழந்த மாணவருக்கு நிவாரண நிதி கிடைக்குமா?

Kabaddi Player Dead in Match: விளையாடி கொண்டு இருக்கும் போது மாரடைப்பால் மரணம் அடைந்த தமிழக கல்லூரி மாணவர் விமல்... தமிழக அரசு நிவாரண நிதி கொடுக்குமா?

Kabaddi: விளையாட்டு மைதானத்தில் உயிரிழந்த மாணவருக்கு நிவாரண நிதி கிடைக்குமா?

கடலூர்: போட்டியின்போது மைதானத்தில் மயங்கி விழுந்து கபடி வீரர் உயிரிழந்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் மாநாடிகுப்பம் பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் பல கல்லூரிகளை சேர்ந்த கபடி அணிகள் கலந்துக் கொண்டன. அதில், புரங்கணி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விமல் கபடி விளையாடி கொண்டிருக்கும் போதே மரணம் அடைந்த நிகழ்வின் வீடியோ பலருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது. 

கபடி வீரர் விமலின் குடும்பத்தினரின் வருங்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு அவரது குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | பாலியல் தொந்தரவு செய்த அப்பாவுக்கு ஆயுள் தண்டனை

அரசு வழங்கும் நிவாரணத் தொகையானது, கபடி வீரர் விமலின் பரிதாப மரணத்திற்கானதாக இருக்கக்கூடாது, அது,  இதுபோன்ற வீர விளையாட்டுகளில் உயிர் பிரிந்தால் தமிழக அரசு நம் குடும்பத்தை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை தற்போதுள்ள இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் என்று அப்துல் ரஹீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நிவாரண நிதியிலிருந்தோ அல்லது தமிழக அரசு நிதியிலிருந்தோ இந்த ஒரு கோடி ரூபாய் நிவராண நிதியை வழங்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

கபடி விளையாடி கொண்டு இருக்கும் போது மாரடைப்பால் மரணம் அடைந்த கல்லூரி மாணவர் விமல் குடும்பத்திற்கு‌ தமிழக அரசு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலிக்குமா?

இதனிடையில், விளையாடி கொண்டு இருக்கும் போது மாரடைப்பால் மரணம் அடைந்த கல்லூரி மாணவர் விமலின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. அப்போது, அவரது உடலுடன், அவர் பெற்ற கோப்பையும் வைக்கப்பட்டது. விளையாட்டு வீரரும் மாணவருமான விமலின் மரணம், கடலூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் பெறும் சம்பளம் மற்றும் இதர வசதிகள் என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More