Home> Sports
Advertisement

NZvsSL: நியூசிலாந்தின் தொடர் வெற்றி; இலங்கைக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றியது

நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இலங்கைக்கு எதிரானா டி20 தொடரையும் கைப்பற்றியது.

NZvsSL: நியூசிலாந்தின் தொடர் வெற்றி; இலங்கைக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றியது

பல்லேகேல்: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் 1-1 என அணிகளும் சமநிலை பெற்றது. இதனையடுத்து தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது.

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் டி-20 போட்டி தொடங்கியது. பல்லேகலேவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து நேற்று அதே மைதானத்தில் இரண்டாவது டி-20 போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி 161 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிரோஷன் டிக்வெல்லா 39 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி சார்பில் சேத் ரான்ஸ் 3 விக்கெட்டும், டிம் சவுத்தி மற்றும் ஸ்காட் குகலீஜ்ன் தலா 2 விக்கெட்டுகளும்ம் இஷ் சோதி ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து வீர்கள் களம் இறக்கினார்கள். 38 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்து தடுமாறியது. அப்பொழுது காலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் டாம் புரூஸ் ஆகியோரின் அதிரடி மற்றும் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றியை நோக்கி நியூசிலாந்து நடை போட்டது. அரை சதமடித்த காலின் டி கிராண்ட்ஹோம் 59 ரன்களும், டாம் புரூஸ் 53 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். கடைசி இரண்டு ஓவரில் ஆட்டம் பரப்பரப்பான கட்டத்தை எட்டியது. 12 பந்தில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தனர். அடுத்த பந்தில் விக்கெட் வீழ்ந்ததால், ஆட்டம் மேலும் பரபரப்பு கூடியது. 19 ஓவரில் 10 ரன்கள் கிடைத்ததால், கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டும் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்ந்தது. நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர் சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியை தேடிதந்தார்.

நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இலங்கைக்கு எதிரானா டி20 தொடரையும் கைப்பற்றியது. கடைசி மற்றும் மூன்றாவது டி-20 போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 6) பல்லேகலேவில் நடைபெற உள்ளது.

Read More