Home> Sports
Advertisement

ரோஹித்தின் செல்லப்பிள்ளைக்கு வாய்ப்பா? - இந்த வீரரை வீட்டுக்கு அனுப்பும் பிசிசிஐ

WI vs IND: ரோஹித் சர்மாவின் செல்லப்பிள்ளை என்றழைக்கப்படும் ஒரு வீரருக்கு வாய்ப்பளிக்க, 29 வயதான மற்றொரு இந்திய வீரரை அணியில் இருந்து தூக்கிவிட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ரோஹித்தின் செல்லப்பிள்ளைக்கு வாய்ப்பா? - இந்த வீரரை வீட்டுக்கு அனுப்பும் பிசிசிஐ

WI vs IND: டொமினிகாவில் நடைபெற்று வரும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிர்ச்சிகரமான முடிவை எடுத்துள்ளார். முதல் டெஸ்டில் இந்தியா அணியின் ப்ளேயிங் லெவனில் ரோஹித் தனது 'செல்லப்பிள்ளை'-க்கு வாய்ப்பளிக்க, ஒரு கிரிக்கெட் வீரரின் வாய்ப்பை பறித்துவிட்டார் என சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. 

இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்ட அந்த வீரரின் எதிர்காலம் தற்போது கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஏனென்றால், அந்த கிரிக்கெட் வீரருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றும், கட்டாயத்தின் பேரில் அவர் ஓய்வை அறிவிக்க நேரிடலாம் என்றும் ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அந்த வீரர் வேறு யாரும் இல்லை, கேஎஸ் பாரத் தான்.

செல்லப்பிள்ளையா இஷான்?

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் லெவன் அணியில், தனக்கு நெருக்கமான இஷான் கிஷானுக்கு வாய்ப்பு அளிக்க இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 29 வயதான கேஎஸ் பாரத்தை அணியில் இருந்து நீக்கியுள்ளார். இப்போது இந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் நெருக்கடி மேகங்கள் சூழ்ந்துள்ளன. 

மேலும் படிக்க | IND vs WI: முதல் நாளிலேயே சாதனைகளை அள்ளிய அஸ்வின்... என்னென்ன தெரியுமா?

ரோஹித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். இஷான் கிஷன் தொடர்ந்து சொதப்பிலும், மும்பை அணியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டே வந்தது, தற்போது வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நல்ல பார்மில் உள்ளார். இருப்பினும், டெஸ்டில் அவருக்கு போதிய அனுபவம் இல்லை, கேஎஸ் பாரத் உடன் ஒப்பிடும்போது. கேஎஸ் பாரத் இதுவரை இந்தியாவுக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18.42 சராசரியில் 129 ரன்கள் எடுத்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இஷான் கிஷன் சிறப்பாக செயல்பட்டால், கே.எஸ்.பாரத் அணிக்கு திரும்புவது கடினம்.

29 வயதில் ஓய்வா...?

சமீபத்தில், இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ்.பாரத்தின் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார். அந்த போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில், கே.எஸ்.பாரத் முதல் இன்னிங்சில் வெறும் 5 ரன்களுக்கு ஸ்காட் போலண்டிடம் கிளீன் பவுல்டு செய்யப்பட்டு, இரண்டாவது இன்னிங்சில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

கே.எஸ்.பாரத்தின் பேட்டிங் அணிக்கு வலு சேர்க்கவில்ல என கூறப்பட்டது. குறிப்பாக, ரிஷப் பந்த் அல்லது இஷான் கிஷன் போன்று ஒரு செஷனில் போட்டியின் நிலையை மாற்றக்கூடிய திறன் பாரத்திடம் எதிர்பார்க்க முடியாது. மிடில் ஆர்டரில் கேஎஸ் பாரத் பேட் செய்யும் இடத்தில், இந்திய அணி ஒரு அதிரடி பேட்ஸ்மேனை கொண்ட நிரப்ப நினைக்கிறது. இந்திய அணிக்கு கே.எஸ்.பாரத் ஆக்ரோஷமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை. 

பேட்டிங்கில் பாரத்திடம் ஆட்டம் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. கே.எஸ்.பாரத்திடம் இருந்து இந்திய அணி எதிர்பார்த்ததை அவர் நிறைவேற்றாததால் ஏமாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இஷான் கிஷானை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இஷான் கிஷானைப் பற்றி பேசுகையில், அவர் பேட்டிங்கில் மிகவும் ஆபத்தானவர். மைதானம் முழுவதும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மழை பொழிந்து ரன்களை குவிப்பதில் இஷான் கிஷன் நிபுணத்துவம் பெற்றவர்.

மேலும் படிக்க | இந்தியா உலகக் கோப்பையை வெல்லாது! சொன்னது வேற யாரும் இல்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More