Home> Sports
Advertisement

ஷேன் வாட்சனின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் லிஸ்டில் இந்திய வீரர் நம்பர் ஒன் - தோனி இல்லை

ஷேன் வாட்சன் வெளியிட்டுள்ள டாப் 5 பேட்ஸ்மேன்கள் லிஸ்டில் விராட் கோலி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.   

ஷேன் வாட்சனின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் லிஸ்டில் இந்திய வீரர் நம்பர் ஒன் - தோனி இல்லை

டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 5 பேட்ஸ்மேன்கள் லிஸ்டை ஷேன் வாட்சன் வெளியிட்டுள்ளார். தன்னுடைய விருப்பப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கு முதல் இடத்தைக் கொடுத்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் அவர் சதமடிக்கவில்லை என்றாலும், கோலி டெஸ்டில் சிறந்த பேட்ஸ்மேன் என வாட்சன் தெரிவித்துள்ளார். போட்டிகளை மாற்றும் திறன் மற்றும் நுணுக்கமான பேட்டிங் திறமை கோலியிடம் இருப்பதாக கூறியுள்ள வாட்சன், இதனால் அவரை எப்போதும் நம்பர் ஒன் இடத்தில்  வைத்திருப்பதாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க | கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்துகளில் 6 விக்கெட் இழந்த அணி

விராட் கோலி இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  அதில் 171 இன்னிங்ஸில் 49.95 சராசரியுடன் 8043 ரன்கள் எடுத்துள்ளார். வாட்சன் லிஸ்டில் 2வது இடத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் உள்ளார்.  40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2851 ரன்கள் எடுத்துள்ளார். இவர் சிறப்பாக விளையாடியதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி டிரா செய்ய முடிந்தது.

fallbacks

3வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும், 4வது இடத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனும் உள்ளனர். 5வது இடத்தை இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்டுக்கு கொடுத்துள்ளார். ஜோ ரூட் 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 49.19 சராசரி வைத்திருக்கும் அவர், 9889 ரன்கள் எடுத்துள்ளார்.  25 சதங்கள் விளாசியுள்ளார். ஜோ ரூட் குறித்து பேசிய வாட்சன், ஜோ ரூட் அண்மைக்காலமாக பெரிய இன்னிங்ஸ் விளையாடுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு - இந்த வீரர் விளையாடமாட்டார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More