Home> Sports
Advertisement

ஃபார்முக்கு வந்த ரஸ்ஸல் - மேக்ஸ்வெல்! BBL-ல் சரவெடி

ஆஸ்திரேலிய பிக்பாஸ் லீக் 20 ஓவர் தொடரில் மேக்ஸ்வெல் மற்றும் ரஸ்ஸல் இருவரும், சிட்னி தண்டர்ஸ் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்

ஃபார்முக்கு வந்த ரஸ்ஸல் - மேக்ஸ்வெல்! BBL-ல் சரவெடி

ஆஸ்திரேலியாவில் பிக்பாஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி தண்டர்ஸ் மற்றும் மெர்ல்பேர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரோஸ், 49 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். அதில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளும் அடங்கும். அவருக்கு பக்கபலமாக விளையாடிய டேனியல் சாம்ஸ் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

ALSO READ | ’ரோகித் பெஸ்ட்’ பழைய பகையால் கோலியை சீண்டும் இந்திய முன்னாள் வீரர்!

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெர்ல்பேர்ன் ஸ்டார்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஸ்டொயினஸ் 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். சிட்னி தண்டர்ஸ் அணியின் கை ஓங்கும் நிலையில், மிடில் ஆர்டரில் களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், 25 பந்துகளில் 40 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.  அவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய ரஸ்ஸல் சிக்சர் மழை பொழிந்தார்.

ALSO READ | தவான் vs ருதுராஜ் ? தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் யாருக்கு வாய்ப்பு

5 சிக்சர்களை விளாசிய ரஸ்ஸல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கடந்த ஐ.பி.எல் போட்டியில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நல்ல ஃபர்மாமென்ஸ் கொடுக்க முடியாமல் இருந்த அவருக்கு, பாகிஸ்தான் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் இடம் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், ரஸ்ஸல் பார்முக்கு திரும்பியிருப்பது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Read More