Home> Sports
Advertisement

RR vs DC IPL 2021: டெல்லி கேபிடல்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி

ஐ.பி.எல் போட்டித்தொடரின் ஏழாவது போட்டி இன்று மும்பை வாங்க்டே மைதானத்தில் நடைபெற்றது. கிறிஸ் மோரிளின் அபார ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

RR vs DC IPL 2021: டெல்லி கேபிடல்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி

மும்பை: ஐ.பி.எல் போட்டித்தொடரின் ஏழாவது போட்டி இன்று மும்பை வாங்க்டே மைதானத்தில் நடைபெற்றது. கிறிஸ் மோரிளின் அபார ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

IPL 2021 தொடரில் தாங்கள் பங்கேற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் டெல்லி அணி களமிறங்கியது. ஆனால், கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றதால், டெல்லியின் கனவு சிதைந்து போனது.

இந்த சீசனின் முதல் போட்டியில் தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2வது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியது. அவர்களின் விருப்பம் நிறைவேறியது.

 முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது டெல்லி அணி. டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் 51 ரன்கள் எடுத்து அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை டெல்லி கேபிடல்ஸ் அணி எடுத்தது.  

அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 19,4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து, த்ரில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையை வீழ்த்திய டெல்லி அணி ஏற்கனவே வலிமையாக இருந்தது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், இன்றைய வெற்றி ராஜஸ்தான் அணிக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.

Also Read | IPL 2021: 6 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாதை வென்றது பெங்களூரு அணி

இந்த போட்டியில் டெல்லி அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. தனிமைப்படுத்துதலில் இருந்த தென்னாப்பிரிக்க பவுலர் ரபாடா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். ஹெட்மெயருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. அதே போல இளம் வீரர் லலித் யாதவ் டெல்லி அணிக்காக அறிமுகமான போட்டி இது.   
 
ராஜஸ்தான் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்ருந்தது. காயத்தால் தொடரில் இருந்து வெளியேறிய பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் அணியில் சேர்க்கப்பட்டார். ஸ்ரேயசுக்கு பதிலாக உனத்கட் களமிறக்கப்பட்டார்.

ALSO READ: சமூக இடைவெளி இல்லை, சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவியும் மீன்பிரியர்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More