Home> Sports
Advertisement

#IPL: மேக்ஸ்வெல் இன்னும் களமிறங்காததுக்கு இதுதான் காரணமாம்!

2021ஆண்டு ஆர்சிபி அணி மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

#IPL: மேக்ஸ்வெல் இன்னும் களமிறங்காததுக்கு இதுதான் காரணமாம்!

ஐபிஎல்லில் பஞ்சாப் அணியில் இருந்துவந்த ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், கடந்த ஆண்டு முதல் பெங்களூர் அணியில் உள்ளார். பெங்களூர் அணிக்கு வந்தது முதல் ஃபுல் ஃபார்மில் இருந்துவரும் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் ருத்ரதாண்டவம் ஆடினார். அத்தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய அவர், 513 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 144.10. கடந்த சீசனில் வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல் நடப்பாண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் தக்கவைக்கப்பட்டார். விராட் கோலி மொகமது சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய 3 பேர் மட்டுமே நடப்பாண்டு ஏலத்துக்குள் செல்லாமல் அந்த அணியால் தக்கவைக்கப்பட்டவர்கள். 2021ஆண்டு ஆர்சிபி அணி அவரை ரூ. 14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

கடந்த சீசனுடன் விராட் கோலி கேப்டன் பொறுப்பைத் துறந்ததாலும் டிவில்லியர்ஸ் ஓய்வுபெற்றதாலும் இம்முறை ஆர்சிபி அணிக்கான கேப்டனாக மேக்ஸ்வெல் நியமிக்கப்படக்கூடும் எனவும் சொல்லப்பட்டது. இதனிடையே, சென்னை அணியில் கலக்கிவந்த டுபிளெசிஸ் ஆர்சிபி அணிக்கு வந்ததால் கேப்டன் பொறுப்பு அவரது வசம் சென்றது.

                                                 fallbacks

தனது திருமணத்தை முடித்துக்கொண்டு கடந்த 1ஆம் தேதியே ஆர்சிபி அணிக்குத் திரும்பிவிட்டார் மேக்ஸ்வெல். இருந்தபோதும், ஆர்சிபி- ராஜஸ்தான் அணிகள் மோதிய  நேற்றைய போட்டியில் அவர் களம் இறங்கவில்லை. சக அணி வீரர்களுடன் அமர்ந்து போட்டியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தார். இதனால் அணிக்குத் திரும்பியும் அவர் களத்துக்குள் வராதது ஏன் எனும் கேள்வி பலருக்கும் எழுந்தது.

மேலும் படிக்க | தினேஷ் கார்த்திக்கின் அதிரடியில் ஆர்சிபி அபார வெற்றி!

இந்நிலையில் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலிய வீரர்கள் ஏப்ரல் 6ஆம் தேதிக்கு பிறகுதான் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்களாம். அதனால்தான் கிளன் மேக்ஸ்வெல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாமல் போனதாம். 6ஆம் தேதிக்குப் பின்னர் அவர்கள் வழக்கம்போல விளையாடலாம். எனவே, வருகிற 9ஆம் தேதி நடைபெற இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்  மேக்ஸ்வெல் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | கேப்டன்சியில் தோனி தலையிடுவதாக ஜடேஜா புகார்: CSKவுக்குள் புது பூகம்பம்?!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More