Home> Sports
Advertisement

ரஸ்ஸல் பந்தை பந்தாடிய ஆர்சிபி - கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றி

மதில்மேல் பூனையாக சென்ற ஆட்டத்தில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   

ரஸ்ஸல் பந்தை பந்தாடிய ஆர்சிபி - கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றி

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 6வது ஐபிஎல் போட்டி மும்பை டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ்வென்ற ஆர்சிபி கேப்டன் பாஃப் டூபிளசிஸ், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் பேட்டிங் களமிறங்கிய கொல்கத்தா அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஓபனிங் இறங்கிய ரஹானே 9 ரன்களுக்கும், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சுனில் நரைன் மற்றும் ரானா முறையே 12 மற்றும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். 

மேலும் படிக்க | தோனியின் இந்த முடிவால் நொறுங்கிப்போனேன் - வருந்தும் சிஎஸ்கே வீரர் Video

ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 67 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்வரிசையில் களமிறங்கிய ஆன்ரே ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 25 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதில் 3 சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். கொல்கத்தா அணிக்காக 50வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய உமேஷ் யாதவ், 12 பந்துகளில் 18 ரன்கள் அடிக்க, 18.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி கட்டத்தில் பெங்களூரு அணியினர் மெத்தனமாக பீல்டிங் செய்தனர். 

fallbacks

பின்னர், 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 3வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெங்களூரு அணி வீரர் அனுஜ் டக்அவுட்டில் வெளியேறினார். அவருக்குப் பிறகு களமிறங்கிய கோலி அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாச, மறுமுனையில் இருந்த கேப்டன் டூபிளசிஸ் லீடிங் எட்ஜில் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். விராட் களத்தில் இருக்கிறார் என பெங்களுரு நம்பிக்கொண்டிருந்த அடுத்த விநாடியில் அதாவது உமேஷ் யாதவின் அடுத்த ஓவரில் விராட்கோலியும் கேட்சாகி வெளியேற, 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் தடுமாறியது. ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கிய டேவிட் வில்லி மற்றும் ரூதர்போர்டு பொறுப்புடன் விளையாடினர். 18 ரன்கள் எடுத்திருந்தபோதும் ரூதர்போர்டு அவுட்டானதால் மீண்டும் ஆட்டம் மதில்மேல் பூனையாக மாறியது. 

fallbacks

கடைசிகட்டத்தில் ரூதர்போர்டு 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார் ஷாபாஸ் அகமது. ஹர்ஷல் படேல் 6 பந்துகளில் 10 ரன்களும், தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 14 ரன்கள் விளாசி ஆர்சிபிஐ வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். முதல் போட்டியில் தோல்வியடைந்த பெங்களூரு, கொல்கத்தா அணிக்கு எதிராக இப்போட்டியில் வெற்றி பெற்று, வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. 

மேலும் படிக்க | அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் 42 வயது ஜாம்பவான்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More