Home> Sports
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தேர்வு செய்யப்படாதது ஏன்? அஸ்வின்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WTC இறுதிப் போட்டியில், உலகின் நம்பர்-1 டெஸ்ட் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பிளேயிங்-11 இல் இடம்பெறவில்லை. அந்த போட்டி குறித்து அஸ்வின் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.  

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தேர்வு செய்யப்படாதது ஏன்? அஸ்வின்

சமீபத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.  இந்த போட்டியில் உலகின் நம்பர்-1 டெஸ்ட் பந்து வீச்சாளர் பிளேயிங்-11ல் சேர்க்கப்படாதது ஆச்சரியமாக இருந்தது. தற்போது அஸ்வினே இது குறித்து ஒரு பெரிய தகவலை வெளிப்படையாக பேசியுள்ளார்.

பிளேயிங்11ல் இடம் கிடைக்கவில்லை

இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WTC இறுதிப்போட்டியில் பிளேயிங் 11ல் சேர்க்கப்படவில்லை. அதன் பிறகு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் இந்த முடிவு குறித்து கேள்விகளை எழுப்பினர். இது குறித்து பதில் அளித்த இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர், ஓவல் கிரிக்கெட் மைதானத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தோம் என விளக்கமளித்தார். ஆனால் அவரது கருத்தை ஏற்க மறுத்திருக்கும் கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்டோர், இந்தப் போட்டியில் இந்தியா அஷ்வினுடன் விளையாடியிருந்தால், அதன் முடிவு மாறியிருக்கும் என்று தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Asia Cup 2023 Date: நினைத்ததை சாதித்த இந்தியா... ஆசிய கோப்பை நடக்கும் இடங்கள் அறிவிப்பு!

அஸ்வின் ரியாக்ஷன் இதுதான்

ரவிச்சந்திரன் அஸ்வின் இப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், இந்தப் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்திருக்கிறார். 'நான் WTC இறுதிப் போட்டியில் விளையாட விரும்பினேன். ஏனென்றால் நான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா சென்றடைவதில் முக்கிய பங்கு வகித்துள்ளேன். கடைசியாக WTC இறுதிப் போட்டியில் கூட நான் நன்றாகப் பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினேன். ஆனால், 48 மணி நேரத்திற்கு முன்பே நான் விடுவிக்கப்படுவேன் என்று எனக்குத் தெரியும்.

சச்சின் டெண்டுல்கரும் விமர்சித்தார்

இந்தியா மற்றும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரும் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து விமர்சித்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'அஷ்வினை விளையாடும் 11-ல் இருந்து நீக்கும் முடிவை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர்' என்று எழுதியுள்ளார்.  மேலும் 'நான் போட்டிக்கு முன்பு கூறியது போல், திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் டர்னிங் டிராக்குகளை மட்டும் நம்புவதில்லை.  பந்துகளை வீசுவதில் சில வித்தியாசங்களை செய்து அணிக்கான பங்களிப்பை கொடுப்பார்கள். ஆஸ்திரேலியாவின் டாப்-8 பேரில் 5 பேர் இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | NO POCSO: போக்சோ வழக்கில் ஆதாரம் இல்லை! பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு க்ளீன் சிட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More