Home> Sports
Advertisement

ஐபிஎல்ல விளையாட உடற்தகுதி அவசியம்! சிஎஸ்கே வீரரை கடுமையாக சாடும் சாஸ்திரி! காரணம் என்ன?

Deepak Chahar vs Ravi Shasthri: முன்னாள் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளரின் மோசமான உடற்தகுதித் தரத்திற்காக அவர் 'நிரந்தர NCA குடியிருப்பாளராக' மாறிவிட்டதாகக் கூறினார்

ஐபிஎல்ல விளையாட உடற்தகுதி அவசியம்! சிஎஸ்கே வீரரை கடுமையாக சாடும் சாஸ்திரி! காரணம் என்ன?

ஐபிஎல் 2023: முன்னாள் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளரின் மோசமான உடற்தகுதித் தரத்திற்காக அவர் 'நிரந்தர NCA குடியிருப்பாளராக' மாறிவிட்டதாகக் கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை ஐபிஎல் 2023ல் மூன்று ஆட்டங்களில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. MS தோனி தலைமையிலான அணி, தற்போது புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

புதன்கிழமை மாலை (ஏப்ரல் 12) 17வது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. . சிஎஸ்கே ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றிருந்தாலும், தோனி தலைமையிலான அணிக்கு காயம் தொடர்பான கவலைகள் அதிக அளவில் உள்ளது.

மொயீன் அலியின் உடல்நிலை சரியில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தை அவர் தவறவிட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸும் முழு உடல் தகுதியுடன் இல்லை, அவரும் சில ஆட்டங்களைத் தவறவிடுவார்.

மேலும் படிக்க | ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் ஆன கிரிக்கெட்டர்

கூடுதலாக, ஏப்ரல் 08 அன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால், தீபக் சாஹர் ஒரு ஓவரை மட்டுமே வீச முடிந்தது. அவரது தொடை தசையில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் சில ஆட்டங்களில் விளையாடமாட்டார். பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் அவர் சிகிச்சை பெற வேண்டியுள்ளது.

ஐபிஎல் 2022 இல், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தீபக் சாஹர் முழு சீசனையும் தவறவிட்டார், மேலும் டிசம்பர் 2022 முதல் டீம் இந்தியாவுக்காகவும் விளையாடவில்லை. காயங்கள், அதிலும் முக்கியமாக முதுகு மற்றும் தொடை எலும்பு பிரச்சனைகள் கடந்த சில ஆண்டுகளில் சாஹரின் விளையாட்டுக்கு தடையாக உள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தீபக் சஹாரை கடுமையாக விமர்சித்துள்ளார்.தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி கொடுத்த அவர், ''சில வீரர்கள் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் நிரந்தமாக தங்க முடிவு செய்துவிட்டார்கள். கூடிய விரைவில் அவர்கள் அங்கேயே குடியேறிவிடுவார்கள் எனத் தோன்றுகிறது'' எனக் கூறினார்.

மேலும் படிக்க | 'இது முத்துப்பாண்டி கோட்டை' இன்று சிஎஸ்கே ஜெயிக்கவே அதிக வாய்ப்பு... எப்படி தெரியுமா?

மேலும் பேசிய அவர், ''தீபக் சஹார் ஒன்றும் காயம் காரணமாக அவ்வப்போது விலகுவதில்லை. தொடர்ந்து நான்கு போட்டிகளில் கூட விளையாடுவது கிடையாது. மறுபடியும் மறுபடியும் காயம் காரணமாக விலகுகிறார். ஏன், தொடர்ந்து பெங்களூரிலேயே தங்கியிருந்து முழு சிகிச்சை எடுத்துக் கொண்டால் என்ன? மீண்டும் 4 போட்டிகளுக்கு பிறகு விளையாடி மீண்டும் காயம் காரணமாக அவதிப்பட்டால், அவர் சிஎஸ்கேவுக்கு தேவையே கிடையாது'' எனத் தெரிவித்தார்

"நீங்கள் உடல் தகுதியுடன் திரும்பி வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது அணிக்கு மட்டுமல்ல, வீரர்கள், பிசிசிஐ மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இது எரிச்சலூட்டுவதாக உள்ளது. குறைந்த பட்சம், கடுமையான காயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால், ஒவ்வொரு நான்கு ஆட்டங்களுக்குப் பிறகும் தொடை தசை அல்லது இடுப்பு எலும்புகளிலோ பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்வது?  சிலர் வேறு எந்த கிரிக்கெட்டையும் விளையாடுவதில்லை. இது அபத்தமானது."

சாஹரின் காயம் பற்றி இப்போது எதுவும் தெரியவில்லை என்றாலும், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக இரண்டுக்கும் மேற்பட்ட ஆட்டங்களைத் தவறவிட இருக்கிறார், மேலும் ஐபிஎல் 2023 இன் மீதமுள்ள போட்டிகளில் அவர் பங்கேற்பாரா இல்லையா என்பதும் சரியாக தெரியவில்லை.

மேலும் படிக்க | IPL 2023: அரைசதம் அடித்தும் கொண்டாடாத ரோஹித் சர்மா - காரணம் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More