Home> Sports
Advertisement

கோலி கொடுத்தாரு வேண்டாம் என சொல்லிட்டேன் - பார்சல் உணவு குறித்து டிராவிட் கலகல

கோலி ஆர்டர் செய்த உணவை என்னையும் சாப்பிட சொல்லி உசுப்பேற்றினார், ஆனால் கொல்ஸ்ட்ரால் என சொல்லி விட்டேன் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.  

கோலி கொடுத்தாரு வேண்டாம் என சொல்லிட்டேன் - பார்சல் உணவு குறித்து டிராவிட் கலகல

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்குப் பிறகு பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுல் டிராவிட் உரையாடினார். கே.எல்.ராகுல் ஒரு நல்ல பிளேயர். அவர் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி சதமடித்திருக்கிறார் என கூறியிருக்கும் டிராவிட் அவர் மீது இன்னும் நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், விராட் கோலி ஆர்டர் செய்த உணவு சாலே பாதுரே இல்லை, அது குசால் சாலே என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். அதை என்னிடம் காண்பித்து உசுப்பேற்றினார் இருந்தாலும் எனக்கு இப்போது ஐம்பது வயதாகிவிட்டது கொல்ஸ்டாரல் சாப்பிடக்கூடாது என கூறி தவிர்த்துவிட்டேன் என கலகலப்பாக தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | IND vs AUS: 2வது டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய அணி செய்துள்ள சரித்திர சாதனை!

இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டிரஸ்ஸிங் ரூமை மிகவும் கலகலப்பாக வைத்திருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவது சிறப்பாக உள்ளது. அவர் ஒருமுறை அணியினருடன் உரையாட தொடங்கியதும் ரோகித் பேசுவதை உன்னிப்பாக அனைவரும் கேட்கிறார்கள். இது ஒரு நல்ல விஷயம். கேப்டனாக ரோகித் அணுகுமுறை மற்றவர்களும் கற்றுக் கொள்ளும் வகையில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், விராட் கோலி போன்ற ஒருவரிடம் இருந்த கேப்டன் பொறுப்பை எடுத்து சிறப்பாக பணியாற்றுவதற்கு ரோகித் பொருத்தமானவராக இருக்கிறார். 

விராட் கோலியை பொறுத்தவரை சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடுகிறார். டெல்லி போன்ற பிட்சுகளில் பந்து லென்துகளை கணிப்பது சவாலான விஷயம். ஆனால் விராட் கோலி உன்னிப்பாக கவனித்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு மிக முக்கியமான காரணம் அஸ்வின் - அக்சர் படேல் பேட்டிங் பார்ட்னர்ஷிப். அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்யாமல் இருந்திருந்தால் இந்தியா முதல் இன்னிங்ஸ் ஸ்கோரில் பின்தங்கியிருக்கும். 

அது எங்களுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். பந்துவீச்சிலும் அஸ்வின் மற்றும் ஜடேஜா மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர். இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இப்போது எங்களுக்கு (ஒட்டுமொத்த இந்திய அணி வீர ர்களுக்கும்) ஓய்வு கிடைத்துள்ளது. அதனை நன்றாக அனுபவிப்போம். இன்னும் நாங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. அந்த பயணத்தில் ஒருபடி முன்னேறி இருக்கிறோம். நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளிலும் இதேபோன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என ராகுல் டிராவிட் கலகலப்பாக கூறினார்.

மேலும் படிக்க | IND vs AUS: 'நான் தான்டா இனிமேலு' விராட் படைத்த சரித்திர சாதனை... மீண்டும் சச்சின் பின்னடைவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More