Home> Sports
Advertisement

ஐபிஎல் ஏலத்தை தவறவிடும் ப்ரீத்தி ஜிந்தா! அவரே சொன்ன தகவல்

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்த ஆண்டு தன்னால் கலந்து கொள்ள முடியாது என பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் ஏலத்தை தவறவிடும் ப்ரீத்தி ஜிந்தா! அவரே சொன்ன தகவல்

பெங்களூருவில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஐபிஎல் 2022 மெகா ஏலம் நடைபெறுகிறது. 10 அணிகளின் உரிமையாளர்களும் பங்கேற்று, தங்கள் அணிக்கான வீரர்களை ஏலத்தின் மூலம் தேர்வு செய்கின்றனர். இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, தன்னால் கலந்து கொள்ள முடியாது என சோகமாக டிவிட்டரில் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | பஞ்சாப் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் திடீர் ராஜினாமா! பின்னணி?

அமெரிக்காவில் இருக்கும் அவர், " குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பில் இருக்கிறேன். கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், உடனடியாக இந்தியாவுக்கு வர முடியவில்லை. இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தை மிஸ் செய்கிறேன்" என  தெரிவித்துள்ளார். ஜீன் குட்இனெஃப் என்பவரை திருமணம் செய்துள்ள ப்ரீத்தி ஜிந்தா, வாடகை தாய் மூலம் இரு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அமெரிக்காவில் இருந்தாலும், ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் பஞ்சாப் அணிக்கான அனைத்து மீட்டிங்குகளிலும் பங்கேற்கிறார். 

சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடிய பிரீத்தி ஜிந்தா, சிவப்பு ஜெர்சியில் யாரை பார்க்க வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்று கேட்டிருந்தார். அவரின் இந்தப் பதிவுக்கு பலரும் தங்களுக்கு பிடித்த வீரர்களை கமெண்ட செக்ஷனில் பதிவிட்டுள்ளனர். ஐபிஎல் ஏலத்தில் மிகப்பெரிய தொகையுடன் களமிறங்கும் ஒரே அணி பஞ்சாப் கிங்ஸ். அந்த அணி கைவசம் 72 கோடியை வைத்துள்ளது. மயங்க் அகர்வால் மற்றும் ஹர்ஷ்தீப் சிங் என இரு வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ள அந்த அணி, ஏலத்தில் நல்ல பிளேயர்களை கொத்தாக தூக்கி புதிய டீமை உருவாக்க உள்ளது.

மேலும் படிக்க | ’கெட்ட வார்த்தை, அதட்டல்’ கேப்டன் ரோகித் சர்மாவின் மறுமுகம்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More