Home> Sports
Advertisement

சிராஜ் என்ன பிஸ்தா பவுலரா? கேள்வியை கண்டுக்காத ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ்

ஒருநாள் போட்டியில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருக்கும் முகமது சிராஜ் குறித்த கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அசால்டாக பதில் அளித்துள்ளார்.   

சிராஜ் என்ன பிஸ்தா பவுலரா? கேள்வியை கண்டுக்காத ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ்

ஆசிய கோப்பையை வென்ற கையோடு இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மோத உள்ளது. ஒருநாள் உலக கோப்பை தொடர் தொடங்க இருக்கும் நிலையில், அந்த போட்டிக்கு முன்னதாக நடைபெறும் இந்த போட்டி என்பதால், இந்திய அணி மிகுந்த உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய தொடரை எதிர்கொள்ள இருக்கிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மொஹாலியில் உள்ள பிசிஏ ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல் இரு போட்டிகளுக்கும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்வின் இப்போட்டியில் களம் காண இருக்கிறார். 

மேலும் படிக்க | உலககோப்பை 2023: நெதர்லாந்து அணிக்கு நெட் பவுலரான சென்னை டெலிவரி பாய்

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் கடைசி நேரத்தில் அந்த அணியில் இருந்து மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வேல் ஆகியோர் விலகியுள்ளனர். இது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்தபிறகு இந்திய அணியை எதிர்கொள்வதால், இந்த தொடரைக் கைப்பற்றி வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற முனைபில் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்தார். மேலும், சிராஜ் குறித்து கேள்வி எழுப்பியதற்கு அசால்டாக பதில் அளித்தார். அதாவது, சிராஜை சமாளிக்க ஏதும் பிரத்யேக திட்டம் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, அப்படியான ஸ்பெஷல் திட்டம் எல்லாம் இல்லை என்று கூறினார். 

நாங்கள் எங்கள் இயல்பான ஆட்டத்தை ஆட இருக்கிறோம். யாரையும் ஆச்சிரியமாகவெல்லாம் பார்க்கவில்லை என தெரிவித்தார். முகமது சிராஜைப் பொறுத்தவரை இப்போது உட்சபட்ச பார்மில் இருக்கிறார். ஆசியகோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒட்டுமொத்தமாக அவுட்டாகி வெளியேற்றி அசத்தினார். இதன் மூலம் ஒருநாள் தொடரில் பல்வேறு சாதனைகளைப் படைத்த அவர், இப்போது ஒருநாள் போட்டியில் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் இருக்கிறார்.  

அந்த போட்டியில் சிராஜ் தொடர்ந்து ஏழு ஓவர்களை வீசி 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்காவிட்டால், ஸ்டூவர்ட் பின்னியின் சிறந்த பந்துவீச்சாளர் (வங்கதேசத்திற்கு எதிராக 6/5) என்ற இந்தியரின் சாதனையை சிராஜ் முறியடித்திருக்க முடியும். ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை எதிரணியினருடன் மைண்ட் கேம்ஸ் விளையாடுவதில் தந்திரமாக செயல்படும். அந்தவகையிலேயே அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், சிராஜ் குறித்து பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. 

மேலும் படிக்க | புதிய ஜெர்சி இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தரும்! ரசிகர்களின் உற்சாகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More